×

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை உயர் நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்பு: தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி ஆய்வு

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை விசாரிக்கும் 48 அமர்வுகள் 7 அமர்வுகளாக குறைக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற வளாகம் முழுவதும் கொரோனா தடுப்பு கிருமி நாசினி தினமும் தெளிக்கப்பட வேண்டும், வக்கீல்கள், தங்களது அறைகளுக்கு வருவதை தவிர்க்க வேண்டும், வக்கீல்கள் அறைகளுக்கு வழக்காடிகள் வருவதையும் முழுவதுமாக தவிர்க்க வேண்டும் என்றும் தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, நீதிபதிகள் சுப்பையா, பொங்கியப்பன் அடங்கிய அமர்வும், நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அடங்கிய அமர்வும் அவசர வழக்குகளை மட்டும் விசாரித்தனர்.

நீதிபதிகள் டி.ராஜா, துரைசாமி, ஜெகதீஷ் சந்திரா, சேஷசாயி, நிர்மல்குமார் அடங்கிய அமர்வும் தனித்தனியாக வழக்குகளை விசாரித்தனர்.
இதற்கிடையே, தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் நேற்று ஒவ்வொரு நீதிமன்ற அறைக்கும் சென்று சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தனர். அதுமட்டுமல்லாமல், வீடியோ கான்பரன்ஸ் மூலம் வழக்குகளை விசாரிக்க வாய்ப்புள்ளதா என்பது குறித்து தலைமை நீதிபதி ஆய்வு செய்தார். பொதுமக்கள், குமாஸ்தாக்கள் அனுமதிக்கப்படவில்லை. இங்குள்ள செஷன்ஸ், சிறப்பு நீதிமன்றங்கள், குடும்பநல நீதிமன்றங்கள் நேற்று மிகக்குறைந்த வழக்குகளை மட்டுமே விசாரித்தன.

Tags : Sahi ,AP ,Chief Justice ,High Court , கொரோனா தடுப்பு,உயர் நீதிமன்றத்தில்,பலத்த பாதுகாப்பு
× RELATED தாகம் தீர்க்கும் பானங்கள் தரமானதா?