×

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான பயிற்றுநர்களுக்கு அரசு பணி வழங்க வேண்டும்: வைகோ வலியுறுத்தல்

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில், அரசுப் பள்ளிகளில் சுமார் 2.5 லட்சம் மாற்றுத்திறனாளி குழந்தைகள் அடையாளம் காணப்பட்டு, சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பணியில், 1998 முதல் தமிழ்நாட்டில், சுமார் 3000 பேர் முழு நேரப் பணி செய்து வருகிறார்கள். பல்வேறு கட்டப் போராட்டங்களுக்குப் பிறகு, இப்போது மாதம் 16,000 ரூபாய் வழங்கி வருகிறார்கள். இந்தத் திட்டத்தில் பணிபுரியும் 80 விழுக்காட்டினர் பெண்கள்தான். இவர்கள் அனைவரும், அரசு உரிமம் பெற்ற சிறப்புப் பள்ளிகளில் படித்துப் பட்டம் மற்றும் பட்டயம் பெற்றவர்கள். 1998ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த இவர்கள் அனைவரும், தற்போது 40 வயது கடந்தவர்களாக இருக்கிறார்கள். இனி, இவர்களுக்கு வேறு பணி வாய்ப்புகள் கிடைக்க வழி இல்லை. எஞ்சிய காலத்திலும் அவர்களுடைய வாழ்க்கை, கேள்விக்குறியாக இருக்கின்றது. எனவே, அவர்களுடைய கோரிக்கையை ஏற்று, அரசுப்பணி வாய்ப்பு அளிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

The post மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான பயிற்றுநர்களுக்கு அரசு பணி வழங்க வேண்டும்: வைகோ வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Govt ,Waco ,Chennai ,Madhyamik General Secretary ,Vaiko ,Tamil Nadu ,
× RELATED அறுவை சிகிச்சை மூலம் பாலினம்...