×

உலகை உலுக்கும் கொரோனா: பிரதமர் மோடி அழைப்பை ஏற்று தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நன்றி தெரிவித்து நாடு முழுவதும் மக்கள் கைதட்டல்

சென்னை: பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நன்றி தெரிவித்து நாடு முழுவதும் மக்கள் கைதட்டல் எழுப்பினர். கொரோனா வைரஸ் உலகின் பல்வேறு நாடுகளை தொடர்ந்து. இந்தயாவிலும் வேகமாக பரவி வருகிறது. நாட்டில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 64 பேருக்கு மேல் வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. இந்தநிலையில், பிரதமர் மோடி கொரோனா வேகமாக பரவுவதை தடுக்கவும், அதனை கட்டுப்படுத்தவும், மக்கள் இன்று ஒருநாள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை வீடுகளுக்குள் இருக்க ஊரடங்கு கடைபிடிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

மேலும் கொரோனாவை எதிர்த்து போராடி வரும் மருத்துவர்கள், சுகாதார பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மக்கள் அனைவரும் இன்று மாலை 05.00 மணிக்கு வீட்டின் நுழைவு வாயிலில் நின்று கைதட்டல் மூலமோ, மணியோசை எழுப்பியோ நன்றியை வெளிப்படுத்துங்கள் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன்படி இந்தியா முழுவதும் பேருந்து, ரயில், விமான போக்குவரத்துகள் ரத்து செய்யப்பட்டது. நாட்டின் எல்லைகளும் மூடப்பட்டன. தொடர்ந்து நாட்டின் தலைநகர் டெல்லி முடங்கியது. மும்பை, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், கேரளா, ஆந்திர, கர்நாடகா என இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களும் மக்கள் ஊரடங்கால் வெறிச்சோடியது.

இந்நிலையில் பல்வேறு மாநிலங்களில் அமைதியாக நடைபெற்று வந்த சுய ஊரடங்கு 5 மணியை எட்டிய நிலையில் பிரதமரின் வேண்டுகோளை ஏற்று நாடு முழுவதும் உள்ள மக்கள் நன்றி தெரிவிக்கும் விதமாக கரவொலி எழுப்பி நன்றி தெரிவித்தனர். கொரோனாவை எதிர்த்து போராடி வரும் மருத்துவர்கள், பணியாளர்களுக்கு கைதட்டி பாராட்டு மற்றும் நன்றி தெரிவித்தனர். நாடு முழுவதும் மக்கள் வீடுகளின் மாடிகளிலும் பால்கனிகளிலும் நின்று கைதட்டி நன்றி தெரிவித்தனர். சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் மக்கள் வீடுகளில் நின்று கைதட்டி பாராட்டு தெரிவித்தனர். தமிழகத்தில் திருச்சி, நெல்லை, கோவை, மதுரை, சேலம் உள்ளிட்ட நகரங்களிலும் பொதுமக்கள் கைதட்டி நன்றி கூறினர். மக்கள் மட்டுமின்றி பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்களது நன்றியை தெரிவித்தனர்.

முதல்வர் பழனிசாமி நன்றி
நாடு முழுவதும் மருத்துவ பணியாளர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக முதலமைச்சர் பழனிச்சாமி கரவொலி எழுப்பி நன்றி தெரிவித்தார். அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் உள்ளிட்டோரும் கைதட்டி ஊக்குவித்தனர். சுகாதாரத்துறை அமைச்ச்சர் சி. விஜயபாஸ்கர் குடும்பத்தினருடன் வீட்டு வாசலில் நின்றி கைதட்டினார்.

மேலும் லக்னோவில் உத்திரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத்பித்தளை தட்டு மணியை ஒழித்து நன்றி தெரிவித்தார். டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா வீட்டு வாசலில் நின்று நன்றி கைதட்டினார். பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் கைதட்டி நன்றி தெரிவித்தார். பல்வேறு மாநில முதலமைச்சர்கள், அமைச்சர்கள் உள்ளிட்டோரும் கைதட்டி நன்றி தெரிவித்தனர். 


Tags : Corona ,world ,Modi Corona ,Modi , Corona, PM Modi, Prevention, Thanks, Applause
× RELATED உலகப் பத்திரிகை சுதந்திர நாளை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!!