×

பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கு தலைசாய்த்த தமிழகம்: குண்டு ஊசி விழுந்தால் ஒலி கேட்கும் இடமாக மாறிய சென்னை

சென்னை: உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரசால் நாடு முழுவதும் 315க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 4 பேர உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை 6 பேருக்கு இந்த பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கானவர்களுக்கு சந்தேகத்தின்பேரில் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு, தனி அறையில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர். உலகளவில் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 13,025 உயர்ந்துள்ளது. உலகளவில்  கொரோனவிற்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,06,892 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையே, கொரோனா வைரஸை தடுக்கும் வகையில், (இன்று) சுய ஊரடங்கை கடைபிடித்து காலை 7 மணி முதல் இரவு 9  மணி வரை அத்தியாவசிய  தேவையின்றி யாரும் வெளியில் வரவேண்டாம் என்று பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்நிலையில், பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று நாட்டு மக்கள் சுய ஊரடங்கு உத்தரவை கடைபிடித்து வருகின்றனர். காலை 7 மணி முதல் இரவு 9  மணி வரை சுய ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்.

இதற்கிடையே, பிரதமர் மோடியின் வருகை மற்றும் கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் தமிழகம், தற்போது, பிரதமர் மோடியின் கொரோனா தொடர்பான சுய ஊரடங்கு உத்தரவுக்கு மதிப்பளித்து தங்களை தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர். எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் சென்னை இன்று சற்றும் சத்தம் இல்லாம் இருக்கிறது. குண்டு ஊசி விழுந்தால் சத்தம் கேட்டும் இடமான சென்னை மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 


Tags : Chennai Modi ,Tamil Nadu ,Chennai , Modi's appeal to Prime Minister Modi's plea: Chennai
× RELATED தேர்தல் முடிந்து விதிமுறைகள்...