×

கொரோனாவால் ரத்தான ரயில் பயணங்களுக்கு பணம் வாபஸ்: முன்பதிவு டிக்கெட்டுகளுக்கான பணம் வாபஸ் என அறிவிப்பு

சென்னை: ரயில்களில் இன்றைய தேதிகளில் இருந்து ஏப்ரல் 15-ம் தேதி வரை பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்தவர்களுக்கு பணம் முற்றிலுமாக திருப்பி தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் எதிரொலியாக பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அந்த ரயில்களில் செல்ல முன்பதிவு செய்தவர்கள் பணத்தை திரும்ப பெறுவதற்கான விதிமுறைகளை ரயில்வேத்துறை வெளியிட்டுள்ளது. அதில் மார்ச் 21- முதல் ஏப்ரல் 15-ம் தேதி வரை பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்தவர்கள் பணத்தை திரும்ப பெற பயண தேதியில் இருந்து 45 நாட்கள் வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

ரயில்கள் ரத்து செய்யப்படாமல் டிக்கெட்டுகள் மட்டும் ரத்து செய்யப்பட்டிருந்தால் பயண தேதியில் இருந்து 30 நாட்களுக்குள் பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 139 என்ற இலவச அழைப்பு மூலம் ரத்து செய்தவர்கள் பயணம் செய்ய முன்பதிவு செய்த தேதியில் இருந்து 30 நாட்களுக்குள் பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்றும் ரயில்வேத்துறை தெரிவித்துள்ளது.


Tags : Corona , Corona, Ratana train, money withdrawn
× RELATED KP.2 என்ற புதிய வகை கொரோனாவால்...