×

ராஜபாளையத்தில் பூட்டி கிடக்கும் பெண்கள் கழிவறை

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் கட்டப்பட்ட பெண்கள் கழிப்பிடம் திறக்கப்படாமல் பூட்டியே கிடப்பதால் பெண்கள் சிரமமடைந்து வருகின்றனர்.
ராஜபாளையம் நகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கடந்த 2015-16ம் நிதி ஆண்டில் பல லட்சம் செலவில் பெண்களுக்கான கழிப்பிடம் மலையடிப்பட்டி 40 அடி சாலையில் கட்டப்பட்டது.

கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டும் இதுவரை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை. காட்சிப் பொருளாகவே இருந்து வருகிறது. இதனை சமூக விரோதிகள் தவறாக பயன்படுத்தி வருகின்றனர். எனவே உடனடியாக கட்டிடத்தை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என பெண்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Tags : Rajapalayam , Lockable women's toilet in Rajapalayam
× RELATED ராஜபாளையத்தில் பகலிலும் எரியும்...