×

உத்தரபிரதேசத்தில் 8ம் வகுப்பு வரை ‘ஆல் பாஸ்’: மாணவர்களுக்கு அடித்தது ஜாக்பாட்

லக்னோ: கொரோனா வேகமாக பரவிவரும் நிலையில், உத்தரப் பிரதேசத்தில் இதுவரை ஒரு வெளிநாட்டினர் உட்பட 15 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  கொரோனா பாதிப்பால் இம்மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் 31ம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸ்  பரவலை தடுக்க, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியரில் 8ம் வகுப்பு வரை எவ்வித தேர்வும் எழுதப்படாமல், அனைவரும்  அடுத்த வகுப்புக்கு செல்லும் வகையில் ‘ஆல் பாஸ்’ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மாநில கூடுதல் தலைமைச் செயலாளர் ரேணுகா குமார் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: உத்தரபிரதேச அரசு மாநிலம் முழுவதும் அனைத்து தேர்வுகளையும் ரத்து செய்துள்ளது. 8ம் வகுப்பு வரை ‘ஆல்பாஸ்’ திட்டம் அறிவிக்கப்படுகிறது. மாணவர்களின் மதிப்பீட்டை  பொறுத்தவரை வகுப்புக்கு வருகை மற்றும் செயல்திறன் அடிப்படையில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக மார்ச் 23-28ம் தேதி வரை தேர்வு நடைபெற இருந்தது. தற்போது பள்ளிகள் மூடப்பட்டதால் 1 முதல் 8ம் வகுப்பு வரை தேர்வுகள் கிடையாது என்று  அம்மாநில அரசு அறிவித்துள்ளது.


Tags : Uttar Pradesh , Uttar Pradesh, 8th class, Jackpot
× RELATED உத்தரப்பிரதேசம் அமேதியில் பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானி தோல்வி