×

கொரோனா விழிப்புணர்வு: நிர்வாகிகளுக்கு ரஜினி உத்தரவு

சென்னை: கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக மக்கள் மன்ற நிர்வாகிகள் விழிப்புணர்வை ஏற்படுத்த நடிகர் ரஜினிகாந்த் உத்தரவிட்டுள்ளார். ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை சமீபத்தில் ரஜினி சந்தித்தார். அப்போது தனது அரசியல் நிலைப்பாடு குறித்து அவர்களிடம் விளக்கினார்.  அதை மக்களிடையே பரப்பும்படியும் கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதையடுத்து மன்ற நிர்வாகிகளை தொடர்புகொண்ட ரஜினிகாந்த், ‘கொரோனா வைரஸ்  குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியமாகும். அதனால் நோய் பரவும் முறை, அதிலிருந்து தற்காத்துக்கொள்வது எப்படி, வெளியூர்  பயணங்களை தவிர்ப்பது உள்ளிட்ட அம்சங்களை மக்களிடம் துண்டுபிரசுரங்கள் மற்றும் பிற முறைகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்’ என  அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த உத்தரவை அவர் மன்ற நிர்வாகிகள் சிலர் மூலம் ரசிகர்களுக்கும் தெரியப்படுத்தும்படி கூறியுள்ளார்.

Tags : executives ,Rajini ,Corona , Corona, alertness, rajini, directive
× RELATED நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் மேலும் 4 முக்கிய நிர்வாகிகள் கைது