×

15 மாவட்டங்களில் 40 பாசன கட்டுமானங்களை ரூ.834.83 கோடி மதிப்பில் மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும்: பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

சென்னை: 15 மாவட்டங்களில் 40 பாசன கட்டுமானங்களை ரூ.834.83 கோடி மதிப்பில் மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது முதல்வர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.  

* விழுப்புரம், திருவண்ணாமலையில் 2 அணைகளின் கொள்ளளவினை ரூ.57.25 கோடியில் மேம்படுத்தும் பணிகள் செயல்படுத்தப்படும்.
* 5 மாவட்டங்களில் 9 இடங்களில் நகர்ப்புற ஏரிகளை ரூ.47.25 கோடியில் புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
* நாகை, தூத்துக்குடி, குமரி மாவட்டத்தில் ரூ.42 கோடியில் கடல் அரிப்பு தடுப்பு சுவர்கள், தூண்டில் வளைவுகள் அமைக்கப்படும்.
* திருச்சி, நெல்லை, குமரி மாவட்டத்தில் பாசன கட்டுமானங்கள் ரூ.26.49 கோடியில் மறுகட்டுமானம் செய்யப்படும்.

* ரூ.35 கோடியில் 10 மாவட்டங்களில் உள்ள பூங்காக்களை சீர்படுத்தி, உட்கட்டமைப்புகள் புனரமைக்கப்படும்.
* 9 மாவட்டங்களில் 12 புதிய பாசன திட்டங்களுக்காக ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள ரூ.1.58 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* பொதுப்பணித்துறை, நீர்வள ஆதார துறையில் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.20.84 கோடியில் புதிய உபகரணங்கள் வாங்கப்படும்.
* கட்டட அமைப்பு அலுவலகங்களுக்கு கணினிகள், மென்பொருட்கள், உபகரணங்கள் ரூ.3.40 கோடி மதிப்பில் வழங்கப்படும்.

நெடுஞ்சாலைத்துறை அறிவிப்புகள்
* ஸ்ரீ பெரம்பத்தூர் - சிங்கப்பெருமாள் கோயில் வரை ரூ.531 கோடியில் சுரங்கப்பாதை சாலை, மேம்பாடு சாலை சந்திப்பு பணி மேற்கொள்ளப்படும்.
* சிறுசேரி- மகாபலிபுரம் வரை ரூ.350 கோடியில் நீளச் சாலை சேவைகளுடன் கூடிய ஆறுவழிச்சாலையாக மேம்படுத்தப்படும்.
* ஓசூர், திருப்பூர், ஈரோடு, கரூர், தொழிற்சாலைகளை இணைக்கும் சாலைகளில் ரூ.361 கோடியில் நீள சாலை மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும்.

* சென்னையில் சாலையில் மழைநீர் தேங்குவதை தவிர்க்க புதிய வடிகால், சிறுபாலங்கள் ரூ.277 கோடியில் கட்டப்படும்.
* சென்னை வெளிவட்ட சாலையுடன் இணைக்கும் 12 சாலைகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்த நில எடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் அறிவித்தார்.

Tags : districts ,announcement ,CM Palanicami , Irrigation Construction, Improvement Work, Council, Chief Minister Palanisamy
× RELATED தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில்...