×

உயர்தர மருத்துவ சேவைகளை வழங்க சைதாப்பேட்டை கால்நடை மருத்துவமனை ரூ.3 கோடி மதிப்பில் மேம்படுத்தப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் அறிவிப்பு

சென்னை: கால்நடை பராமரிப்பு மானியக் கோரிக்கை விவாத்தின் போது அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அறிவிப்பு:
* மாநிலத்தில் பசுந்தீவனம் போதுமான அளவு கிடைப்பதை உறுதி செய்தற்காக தீவன சோளம், காராமணி, கோ(எப்எஸ்) 29 மற்றும் வேலிமசால் அடங்கிய விலையில்லா தீவன விதை தொகுப்புகள் ரூ.12 கோடி செலவில் 3.20 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
* பசுந்தீவன சாகுபடியில் ஏற்படும் சிரமங்களை குறைப்பதற்காக, ரூ.4.70 கோடி மதிப்பீட்டில் 75 சதவித மானியத்தில் 2500 விவசாயிகளுக்கு பசுந்தீவனம் அறுவடை செய்யும் கருவிகள் வழங்கப்படும்.
* கால்நடைகளின் உற்பத்தித் திறனை அதிகரிக்க 33 மாவட்டங்களில் உள்ள 34 உப வடிநிலங்களில் ரூ.9.37 கோடி செலவில் 40 பால்வள ஆர்வலர் குழுக்கள் அமைக்கப்பட்டு கால்நடை நலப்பணிகள் மேற்கொள்ளப்படும்.
*  ஆண்டு முழுவதும் பசுந்தீவனம் கிடைப்பதை உறுதி செய்வதற்காக விருதுநகர் மாவட்டம், சாத்தூர் ஆட்டுப் பண்ணையில் ரூ.2.99 கோடி செலவில் 75 ஏக்கர் நிலப்பரப்பில் பலவகைப் புற்கள், பயறு வகைகள் மற்றும் சிற்றின மரங்களை
உள்ளடக்கிய மரத்தீவன மேய்ச்சல் நிலம் ஏற்படுத்தப்படும்.
* சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள கால்நடைகளுக்கு உயர்தர மருத்துவ சேவகைளை வழங்குவதற்காக ரூ.3 கோடி செலவில் சைதாப்பேட்டை கால்நடை பன்முக மருத்துவமனை மேம்படுத்தப்படும்.
* துறை நடவடிக்கைகளை நன்முறையில் கண்காணித்து, திட்ட செயலாக்கத்தை உறுதி  செய்ய ஒருங்கிணைந்த மண்டல இணை இயக்குநர் மற்றும் உதவி இயக்குநர் அலுவலக  கட்டிடங்கள் நடப்பாண்டில் ரூ.9 கோடி செலவில் நாமக்கல், திருச்சி,  புதுக்கோட்டை மற்றும் தேனி மாவட்டங்களில் கட்டப்படும்.
*ராணிப்பேட்டையில் இயங்கி வரும், கால்நடை நோய் தடுப்பு மருந்து நிலையத்தில் நோய்களை கண்டறியும் நிர்ணயிப்பான்களை சிறந்த தரத்தில் உற்பத்தி செய்வதற்காக நோய் நிர்ணயிப்பான் உற்பத்தி கூடம் ரூ.8.02 கோடி செலவில் நல்உற்பத்தி தரத்திற்கு மேம்படுத்தப்படும்.
* பாதிக்கப்பட்ட நாய்கள் மூலம் மனிதர்களுக்கு பரவும் கொடிய வெறிநோய் தாக்குதல்களிருந்து மனிதர்களைப் பாதுகாக்கும் பொருட்டு நடப்பாண்டில் ரூ.1.67 கோடி செலவில், முற்காப்பு நடவடிக்கையாக நகராட்சிகளில் உள்ள 4 லட்சம் நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி போடப்படும்.
* குதிரையினங்களில் ஏற்படும் புரவிக் காய்ச்சல் நோயைக் கண்டறிய ரூ.50 லட்சத்தில் உதகமண்டலம், திருச்சி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கால்நடை நோய் புலனாய்வு பிரிவுகளில் நோய் கண்டறியும் வசதிகள் மேம்படுத்தப்படும்.
* கால்நடை வளர்ப்போர் பயன்பெறும் வகையிலும், திட்ட பணிகள் கால்நடை வளர்ப்போரை விரைவாக சென்றடையவும் ஏதுவாக ரூ.10 கோடி செலவில் பத்து கள கண்காணிப்பு உதவி இயக்குநர் அலுவலகங்களுக்கு புதிய கட்டிடங்கள் கட்டப்படும்.
* மாநிலத்தின் அனைத்து கால்நடை நிலையங்களிலும் உயிர் மருத்துவக் கழிவு மேலாண்மை விதிகள் 2016யை செயல்படுத்தும் பொருட்டு ரூ.7 கோடி மதிப்பில் உயிர் மருத்துவக் கழிவுகள் வரையறுக்கப்பட்ட முறையில் அப்புறப்படுத்தும் பணி
மேற்கொள்ளப்படும்.
* இலவச கறவைப் பசுக்கள் வழங்கும் திட்டத்தின் 12,000 பயனாளிகள் பயன்பெறும் வகையில் ரூ.4.10 கோடி மதிப்பில் கன்றுகளைப் பராமரிக்க தேவையான மருந்துப் பெட்டிகள் வழங்கப்படும்.
* வெள்ளாட்டின ஆராய்ச்சி மையம் ரூ.2.70 கோடி நிதி ஒதுக்கீட்டில் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள தென்காசி மாவட்டத்தில் நிறுவப்படும்.
* சென்னை சிவப்பு செம்மறியாடு உள்ளீட்டு மையம் ரூ.2.85 கோடி நிதி ஒதுக்கீட்டில் கால்நடை அறிவியல் முதுகலை ஆராய்ச்சி நிலையம், காட்டுப்பாக்கத்தில் நிறுவப்படும்.
* விலங்குவழி பரவும் நோயறி ஆய்வகம் ரூ.2.54 கோடி நிதி ஒதுக்கீட்டில் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஒரத்தநாட்டில் நிறுவப்படும்.
* தனுவாஸ் கிராண்ட் ஊட்டச்சத்து மூலம் பால் உற்பத்தியை அதிகப்படுத்தும் திட்டம் ரூ.2 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.
* திருச்சி கருப்பு செம்மறியாட்டின ஆராய்ச்சி நிலையம் ரூ.2.12 கோடி நிதி ஒதுக்கீட்டில் தர்மபுரி மாவட்டத்தில் அமைக்கப்படும்.
* புதிய கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் ரூ.1.70 கோடி நிதி ஒதுக்கீட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் நிறுவப்படும்.


Tags : Saidapet Veterinary Hospital ,hospital ,Saidapet , Minister of High Quality Medical Services, Saidapet Veterinary Hospital,
× RELATED ‘ஐசியு’ நோயாளிகளின் மனநலனை...