×

சென்னை முழுவதும் புதைவட கம்பி: அமைச்சர் தங்கமணி அறிவிப்பு

சென்னை: சட்டப்பேரவையில் தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா (திமுக) பேசுகையில்,  தாம்பரம் தொகுதியில் தாம்பரம் நகராட்சி, செம்பாக்கம், சிட்லப்பாக்கம் பகுதியில் புதைவட கேபிள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இவற்றை பெருங்களத்தூர், பீர்க்கன்காரணை பகுதியிலும் விரிவுபடுத்த வேண்டும் என்றார். இதற்கு பதில் அளித்து மின்துறை அமைச்சர் பி.தங்கமணி பேசுகையில், “தாம்பரத்தில் ரூ.353 கோடி மதிப்பீட்டில் 1230 கி.மீ. புதைவட தளமாக மாற்றும் பணிகள் நடந்து வருகிறது. சென்னை மாநகரம் முழுவதும் நாங்கள் அமைக்க வேண்டும் என்பதற்காக பெரம்பூர், தாம்பரம் கோட்டத்தில் எடுத்திருக்கிறோம். அடுத்தகட்டமாக அந்த பணிகள் தொடங்க இருக்கிறோம். கிட்டத்தட்ட 6,500 கிலோ மீட்டர் அளவுக்கு புதிய மின் கம்பிகள் மாற்றப்பட்டிருக்கின்றன. சென்னை மாநகரம் முழுவதும் புதைவடக்கம்பிகள் அமைக்கப்படும்” என்றார்.

Tags : Thangamani ,Chennai , Fossil wire, Minister Thangamani across Chennai
× RELATED வாக்களிக்க சொந்த ஊருக்கு சென்ற...