×

60 வயதுக்கு மேலானவர்களை தாக்கினால் மரணமா?... கொரோனாவை வீழ்த்திய 103 வயது மூதாட்டி: ஆச்சரியத்தில் திகைத்து நிற்கிறது சீன மருத்துவக் குழு

பிஜீங்: கொரோனா வைரஸ் 60 வயதுக்கு மேலானவர்களை தாக்கினால் மரணம் ஏற்படும் என்ற நிலையில், சீனாவை சேர்ந்த 103 வயது மூதாட்டி கொரோனாவை வீழ்த்தி உயிர்தப்பித்தார். இதனை சீன மருத்துவக் குழு ஆச்சரியத்துடன் பார்த்து வருகிறது. சீனாவில் 2019 நவம்பர் கடைசியில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றுநோய், இன்று உலகம் முழுவதும் மக்களை ஆட்டிப் படைக்கிறது. சீனாவின் வூஹான் மாகாணத்தில் இருந்து பரவிய இந்த வைரஸ் பாதிப்பால், இதுவரை சீனாவில் 3,226 பேர் பலியாகி உள்ளனர். நோயால் 80,881 ேபர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 13 பேர் பலியாகியும், 21 பேருக்கு புதியதாக நோய் தொற்று பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.

மொத்தமாக 68,688 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து சிகிச்சை பெற்று நலமுடன் உள்ளனர். அவர்களில் ஒருவர்தான், ஜாங் குவாங்பென் என்ற 103 வயது மூதாட்டி. லேசான நாள்பட்ட மூச்சுக்குழாய் அழற்சியால் பாதிக்கப்பட்ட அந்த மூதாட்டி, வூஹானில் உள்ள ஒரு மருத்துவமனையில் வெறும் ஆறு நாட்கள் மட்டுமே சிகிச்சை பெற்று நலமுடன் வீடு திரும்பி உள்ளார். வூஹானில் இருந்து வெளியிடப்பட்ட ஒரு வீடியோ, இணையத்தில் வைரலாகி வருகிறது. மூதாட்டி ஜாங் குவாங்பெனுக்கு சிகிச்சை அளித்த மருத்துவ குழு, அவர் நலமுடன் இருப்பதை உறுதி செய்துள்ளது.

மார்ச் 1ம் தேதி மூதாட்டி உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, ​​அவர் ஆபத்தான நிலையில் இருந்தார். அவரால், மருத்துவர்களிடம் கூட தனது நிலையை எடுத்துக் கூற முடியவில்லை.
இந்த நிலையில் குவாங்பென் கொரோனா வைரஸ் காய்ச்சலில் இருந்து மீண்டது, சீன மருத்துவர்களால் முக்கிய விவாதப் பொருளாக மாறிவிட்டது. உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய செயலிழப்பு ஆகியவற்றுடன் அனுமதிக்கப்பட்ட மூதாட்டி, முழுமையாக மீண்டது அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. கொரோனா வைரஸ் தொற்றினால், 60 வயதுக்கு ேமற்பட்டவர்கள் மரணத்தில் இருந்து தப்ப முடியாது என்பது பொதுவான கருத்து என்றாலும்,

கடந்த வாரம் வயதானவர்களில்  பெரும்பான்மையானவர்கள் (90 சதவீதம் பேர்) தங்களது உயிரை வைரஸ் பாதிப்பில் இருந்து தக்கவைத்துக் கொண்டுள்ளனர் என்று பேராசிரியர் கிறிஸ் விட்டி என்பவர் தெரிவித்தார். கொரோனா பிடியில் இருந்து தப்பித்த மூதாட்டி ஜாங் குவாங்பெனுவுக்கு, உலகெங்கிலும் உள்ள மக்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்புகூட வூஹானை சேர்ந்த 101 வயதான ஒருவர் வைரஸ் காய்ச்சலில் இருந்து தப்பித்தார். இவர்தான் அதிகபட்ச வயதில் தப்பித்த சீன நபர் என்று பேசப்பட்டு வந்த நிலையில், அடுத்த சில நாட்களுக்குப் பிறகு, ஜாங் குவாங்பென் கொரோனா வைரசிலிருந்து மீண்ட மிக வயதான நபர் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Corona ,Chinese Medical Group ,Moody , Corona, Moody, Chinese Medical Group
× RELATED KP.2 என்ற புதிய வகை கொரோனாவால்...