×

நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனைக்கு எதிராக குற்றவாளி முகேஷ்சிங் நீதிமன்றத்தில் புதிய மனு

டெல்லி: நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனைக்கு எதிராக குற்றவாளி முகேஷ்சிங் நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்துள்ளார். டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள 4 குற்றவாளிகளில் 3 பேர் தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனைக்கு தடை விதிக்க கோரி டெல்லி நீதிமன்றத்தில் புதிய மனுவை தொடர்ந்துள்ளனர். சம்பவம் நடந்த நேரத்தில் நான் குற்ற இடத்தில் இல்லை என மனுவில் தெரிவித்துள்ளார். திஹார் சிறையில் சித்திரவதை செய்யப்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

Tags : Mukesh Singh , Nirbhaya, hanging, guilty, Mukesh Singh, petition
× RELATED நீட் விவகாரத்தில் தமிழக அரசு மீது...