×

கொரோனா தாக்கம் காரணமாக தொடர்ந்து இந்திய பங்குச்சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ் குறியீட்டு 530 சரிந்து 30,859 புள்ளிகளுடன் வர்த்தகம்

மும்பை: கொரோனா வைரஸ் பாதிப்பு துவங்கியதில் இருந்தே சர்வதேச பங்குச்சந்தைகள் ஆட்டம் கண்டு வருகின்றன. இதன்  எதிரொலியாக, 2-வது வாரமாக இந்திய பங்குச்சந்தை தொடர்ந்து சரிந்து வருகிறது. வாரத்தின் முதல் நாளான நேற்று வணிகம்  தொடங்கிய உடனேயே பங்குச் சந்தையின் புள்ளிகள் மளமளவென குறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு  எண் சென்செக்ஸ் 1,885 புள்ளிகள் குறைந்து 32,240 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி  513 புள்ளிகள் குறைந்து 9,500 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது.

இந்நிலையில், இன்று வர்த்தக தொடக்கத்தின் போது மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், 530.55 புள்ளிகள் சரிந்து  30,859.52 புள்ளிகளுடன் வர்த்தகம் தொடங்கியுள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீடு நிப்டி  புள்ளிகள் சரிந்து 9,079 புள்ளிகளுடன்  வர்த்தகம் தொடங்கியுள்ளது.

அதிகபட்ச சரிவாக, கடந்த மாதம் 28ம் தேதி வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், 1,448.37 புள்ளிகள்  சரிந்து 38,297.29 ஆக இருந்தது. கடந்த மார்ச் 6-ம் தேதி வெள்ளிக்கிழமை மும்பை பங்குச்சந்தையில்  சென்செக்ஸ் 37,577 புள்ளிகளாக  இருந்தது. இதுபோல், தேசிய பங்குச்சந்தை குறியீடு நிப்டி 414.10 புள்ளிகள் சரிந்து 11,219.20 ஆனது. இதனால், ஒரே நாளில் பங்குகளின்  மதிப்பு 5,53.013.66 கோடி சரிந்து 1,46,87,010.42 ஆக ஆனது. மும்பை பங்குச்சந்தை  இதற்கு முன்பு 2015 ஆகஸ்ட் 24ம் தேதி 1,624  புள்ளிகள் சரிந்ததே அதிகபட்ச சரிவாக இருந்தது. தற்போது, 530 புள்ளிகள் சரிந்து முதலீட்டார்கள் மத்தியில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

Tags : Indian Stock Exchange ,Sensex , Indian stock market plummets due to corona impact: Sensex falls 530 points to 30,859 points
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 609 புள்ளிகள் சரிவு..!!