×

துறைமுகம் டேவிஷன் சாலையில் கட்டப்பட்ட சார்பதிவாளர் அலுவலகத்தை உடனே புதுப்பிக்க வேண்டும்: பேரவையில் பி.கே.சேகர்பாபு எம்எல்ஏ வலியுறுத்தல்

சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது துணை கேள்வி எழுப்பி துறைமுகம் தொகுதி எம்எல்ஏ பி.கே.சேகர்பாபு(திமுக) பேசியதாவது:துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட டேவிஷன் சாலையில் ஒரு சார்பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. கடந்த ஆண்டு இது சம்பந்தமாக துணை கேள்வியில் கேட்கின்ற போது, அந்த சார்பதிவாளர் அலுவலகம் நூறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். அந்த கட்டிடம் முழுவதுமாக சிதிலமடைந்து, எப்போது வேண்டுமானாலும் விபத்து ஏற்படக்கூடிய ஒரு சூழ்நிலை இருக்கின்றது. அதுவும் புதியதாக இடங்கள் வாங்குவோர்கள் பதிவு செய்ய வருகின்ற போது, அந்த இடமே ஒரு மங்களகரமாக இல்லை.

அமங்கலமாக இருக்கிறது. ஆகவே, கடந்த ஆண்டு நான் இந்த வினாவை தொடுத்த போது, உடனடியாக அந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டு, உரிய நடவடிக்கை  மேற்கொள்ளப்படும் என்று அறிவித்தார். தேவைப்பட்டால் சட்டமன்ற உறுப்பினர் அல்லது நாடாளுமன்ற உறுப்பினரே கூட அதற்கு தேவையான நிதியை ஒதுக்கி தருவதற்கு தயாராக இருக்கிறோம் என்று கூட எடுத்து கூறினோம். அமைச்சர் அதற்குண்டான முயற்சிகளை ஏதேனும் எடுத்திருக்கிறாரா? என்பதை அறிய விரும்புகிறேன்.

அமைச்சர் கே.சி.வீரமணி: துறைமுகம் சார்பதிவாளர் அலுவலக கட்டிடம் கட்டப்பட்டு, கிட்டத்தட்ட நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டும் இதே கேள்வியை உறுப்பினர் இங்கே தெரிவித்திருக்கிறார். இந்த வருடத்திலேயே முதல்வர் புதிய கட்டிடம் கட்டுவதற்கான திட்டங்களை தீட்டி, அதற்கு வேண்டிய அறிவிப்புகளை அறிவிக்க இருக்கின்றார். அந்த நேரத்தில் அந்த கட்டிடத்தை அகற்றக்கூடிய சூழ்நிலை இருந்தால், அது முழுமையாக பழுதடைந்திருந்தாலும், கண்டிப்பாக அகற்றக்கூடிய சூழ்நிலை இருந்தால், அது முழுமையாக பழுதடைந்திருந்தாலும், கண்டிப்பாக அகற்றிவிட்டு, அங்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு முதல்வரிடம் எடுத்து சொல்லி, அதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.


Tags : PK Sekharbabu MLA ,Delegate ,Harbor , Harbor, Delegate, PK Sekharbabu MLA, Emphasis
× RELATED தடைக்காலம் 2 வாரத்தில் நிறைவு;...