×

கொரோனா பரவலை தடுக்க டாஸ்மாக் கடைகளில் நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க டாஸ்மாக் மதுக்கடைகளை மூடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் சூரியபிரகாசம் தாக்கல் செய்த கூடுதல் மனுவில், சென்னையில் நெருக்கமான தெருக்களில் டாஸ்மாக் கடைகள், பார்கள் சுகாதாரமற்ற முறையில் உள்ளன. இதனால் கொரோனா வைரஸ் பரவ 90% வாய்ப்புள்ளது. எனவே டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட வேண்டும். மேலும், டாஸ்மாக் கடைகளில் கைகளை கழுவுவதற்கு தேவையான தண்ணீரை விநியோகிக்க உத்தரவிட வேண்டும், என கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், 3 கொரோனா பரவலை தடுக்க டாஸ்மாக் கடைகளில் நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? என கேள்வியெழுப்பியுள்ளது. மேலும், இம்மனு குறித்து தமிழக அரசு ஒரு வாரத்தில் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Tags : Taskmaster Stores ,Corona Spread ,Chennai High Court ,Tasmacs , Corona Virus, Tasmac, High Court of Madras, Government of Tamil Nadu
× RELATED வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டி...