×

கொரோனா பாதிப்பு பற்றி ஒருங்கிணைந்த நடவடிக்கை: வாசுகி, கொரோனா வைரஸ் ஆய்வு மையம் டாக்டர்

தமிழகத்தில் சென்னை மற்றும் தேனிக்கு அடுத்தப்படியாக திருவாரூரில் கொரோனா வைரஸ் நோய் கண்டுபிடிப்புக்கான ஆய்வு மையம் துவங்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழகத்தில் ஏற்கனவே, வைரஸ் தாக்குதலை கண்டுபிடிப்பதற்காக விடிஆர்எல் எனப்படும் மைக்ரோ ஆய்வு மையம் சென்னை எம்எம்சி மற்றும் கிண்டி ஆராய்ச்சி மையம் மற்றும் விழுப்புரம், திருவாரூர், கோவை, சேலம், மதுரை, தேனி, நெல்லை ஆகிய ஊர்களில் இருந்து வரும் அரசு மருத்துவகல்லூரிகளில் என மொத்தம் 9 இடங்களில் இருந்து வருகிறது. வைரஸ் நோய் தொற்று கண்டுபிடிப்பதற்கான ஆய்வு மையம் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உரிய கருவிகளுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிது. இங்கு பல ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. சில விஷயங்கள் குறித்து ெதாடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்குரிய மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் உரிய முறையில் பயிற்சி பெற்று பணியாற்றி வருவதால் ஏற்கனவே  வைரஸ் தாக்குதல் நோயினை கண்டுபிடிக்கும் பணியில் சிறப்பாக செயல்பட்டதற்காக தமிழக அரசின் சுகாதாரத்துறை மூலம் இந்த அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது கொரோனா நோய் தொற்று பரிசோதனை மையம் துவங்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் பற்றிய அனைத்து விவரங்களும் ேசகரிக்கப்பட்டு, பல வகையில் ஆய்வுகள் மேற்ெகாள்ளப்பட்டு வருகின்றன. இந்த ஆய்வு முடிவுகள் பல கட்டங்களில் ஆலோசிக்கப்பட்டு அதற்கேற்ப அடுத்த கட்ட ஆய்வு நடத்த முடிவு செய்யப்படும். இந்த வகையில் இங்குள்ள ஆய்வாளர்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு காய்ச்சல், இருமல், சளி மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் போன்ற அறிகுறிகள் இருப்பின் அவர்களுக்கு சளி மற்றும் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது. அதன்படி ஆய்வுக்கு உட்படுத்தப்படுபவர்களின் மூக்கு மற்றும் தொண்டை பகுதியில் இருந்து குச்சி மூலம் பஞ்சு கொண்டு எடுக்கப்படும் சளி மாதிரிகள் மற்றும் உடம்பில் எடுக்கப்படும் ரத்த மாதிரிகள் ஆகியவை பரிசோதனைக்கு உட்படுத்தப்படும்.  இங்குள்ள ஆய்வாளர்கள் எல்லா வகையிலும் ஆய்வு மேற்கொண்டு பரிசோதனைகளை நடத்திய பின் முடிவுகளை தயார் செய்கின்றனர். இந்த முடிவுகள் எல்லாம் உடனுக்குடன் தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு அறிக்கைகள் தயார் செய்யப்படுகின்றன.

ரியல் டைம் பிசிஆர் டெஸ்ட் எனப்படும் இந்த ஆய்வுக்கு உரிய மருந்துகள் அனைத்தும் மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் இருந்து வரும்  தேசிய வைராலஜி இன்ஸ்டிடியூட் மூலமாக வழங்கப்படுகின்றன. அதன்படி 250 நபர்கள் வரையில் பரிசோதனை செய்வதற்கு உரிய மருந்திற்கான கிட் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மருந்துகள்  இருப்பு குறித்து தினமும் காலை 9 மணியளவில் இந்த தேசிய வைராலஜி இன்ஸ்டிடியூட்டிற்கு தகவல் தெரிவிக்கப்படும். அதன்பின்னர் தேவையான மருந்துகளை அவர்கள் உடனடியாக அனுப்பி வைப்பார்கள். மேலும், நாங்கள் மேற்கொள்ளப்படும் பரிசோதனையில் கொரோனா நோய் பாசிட்டிவ் என்று தெரிந்தால் உடனே உஷார் செய்யப்படும். பாதிப்பு துவங்கி இருக்கும் பட்சத்தில் இது குறித்து உடனடியாக தேசிய வைராலஜி இன்ஸ்டிடியூட்டிற்கு தகவல் தெரிவிக்க்ப்பட்டு, அதன் பின்னர் முடிவுகள் அறிவிக்கப்படும். இது மட்டுமின்றி டெல்லியில் இருந்து வரும் மருத்துவ ஆய்வு துறை மற்றும் இந்திய மருத்துவ கழகம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பு மூலமும் கொரோனா வைரஸ் குறித்த தகவல்கள் தினந்தோறும் வீடியோ கான்பரன்சிங் மூலமும் பெறப்பட்டு வருகின்றன. எங்களுக்கு தரப்படும் அறிவுரையை ஏற்று, திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சார்பில் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Tags : Vasuki ,Corona Virus Research Center ,Corona ,Dr. ,Tamilnadu , Tamilnadu, Corona, Surveillance
× RELATED விஷ செடிகளுக்கு தமிழக மண்ணில் இடம்...