×

கடல் சீற்றத்தால் பாம்பன் குந்துகால் பகுதியில் கடல் அரிப்பு: விவேகானந்தர் மண்டபம் சுற்றுச்சுவர் சேதம்

ராமேஸ்வரம்: மன்னார் வளைகுடா கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள கடல் சீற்றம் காரனமாக பாம்பன் குந்துகால் பகுதியில் கடலோர அரிப்பு ஏற்பட்ட்டதால் விவேகானந்தர் நினைவு மண்டபத்தின் சுற்றுச்சுவர் சேதமடைந்து கீழே விழுந்தது. பாம்பன் குந்துகால் கடற்கரை பகுதியில் சுவாமி விவேகானந்தர் வந்து சென்றதன் நினைவாக விவேகானந்தர் நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் ராமகிருஷ்ணமடம் பாராமரிப்பு மற்றும் மேற்பார்வையில் இருக்கும் விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு நாள் தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கடந்த சில நாட்களாக மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.

நீரோட்டமும் அதிகரித்து இருப்பதால் பாம்பன் தெற்கு கடலோர பகுதியில் கடலரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பாம்பன் குந்துகால் கடற்கரையோரத்தில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டப சுற்றுச்சுவரின் அடிப்பகுதி கடல் அரிப்பினால் சேதமடைந்து உடைந்து கீழே விழுந்துள்ளது. கடல் சீற்றத்தினால் தொடர்ந்து கடலரிப்பு ஏற்பட்டால் சுற்றுச்சுவரின் பின்பகுதி முழுவதும் சேதமடைந்து கீழே விழும் நிலை உள்ளது. இதனைத் தடுக்க பாறைக்கற்களை போட்டு தடுப்புகள் அமைக்க வேண்டும் என பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், நினைவு மணடபத்தில் பின்பகுதி கடலோரத்தில் சுற்றுலா பயணிகள் சென்று கடலில் கால்நனைத்து திரும்புவது வழக்கமாக உள்ளதால் பாதுகாப்பு கருதி கடல் சீற்றம் குறையும் வரை கடற்கரை பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்வதை தவிர்க்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags : Sea erosion ,squat area ,Pamban ,area ,Vivekananda Hall Sea ,Bamban , Sea rage, Bamban squat area, sea erosion
× RELATED பாம்பன் கடலோரப் பகுதியில் பரவி...