×

திருப்பரங்குன்றத்தில் தமிழ் முறைப்படி நடந்தது பிலிப்பைன்ஸ் பெண்ணுக்கும் தமிழக இன்ஜினியருக்கும் ‘டும்டும்’

திருப்பரங்குன்றம்: சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பொறியியல் பட்டதாரிக்கும், சிங்கப்பூரில் பணியாற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண்ணுக்கும் திருப்பரங்குன்றத்தில் நேற்று திருமணம் நடந்தது.சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தயாபுரத்தை சேர்ந்தவர் கோபால். மனைவி வசந்தா. இவர்களது மூத்த மகன் நிர்வின். பொறியியல் பட்டதாரி. இவர், சிங்கப்பூரில் உள்ள ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த பிலிப் அல்புரோ - மிண்டா அல்புரோ தம்பதி மகள் மேரிஜேன் அல்புரோ. இவரும், சிங்கப்பூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார்.

 நிர்வினும், மேரிஜேன் அல்புரோவும் கடந்த 3 ஆண்டுகள் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களது திருமணத்துக்கு பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து திருப்பரங்குன்றத்தில் நேற்று வைதீக முறைப்படி இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இதில், மணப்பெண் தமிழ் கலாச்சாரப்படி சேலை அணிந்திருந்தார். தமிழ் கலாச்சார முறைப்படி திருமணம் செய்த தம்பதியரை அனைவரும் பாராட்டினர்.



Tags : Tamil ,engineer ,Filipino ,Tamil Nadu , Tamil ,Tiruparankundram, ,Filipino woman Tamil engineer
× RELATED உடல் பருமன் குறைப்பு...