×

தெலுங்கு தேசம் எம்எல்சி ராஜினாமா

திருமலை: ஆந்திரா, கர்னூல் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் துணை முதல்வர் கிருஷ்ணமூர்த்தியின் சகோதரரும் முன்னாள் அமைச்சருமான தெலுங்கு தேசம் எம்எல்சி பிரபாகர் தனது பதவியையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தார். இது குறித்து நேற்று அவர் நிருபர்களிடம் கூறுகையில், கட்சித் தலைமை பழைய நிலையில் இல்லை. பாஜவை சேர்ந்த நிர்வாகியின் பேச்சைக் கேட்டு செயல்படுகின்றனர். நகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு  போட்டியிடுவதற்கு கூட என்னிடம் ஆலோசனை கேட்கப்படவில்லை. விரைவில் எந்த கட்சியில் சேர்வது  என்பது குறித்து அறிவிக்கப்படும்’’ என்றார். ஏற்கனவே தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என பல முக்கிய தலைவர்கள் விலகி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து வரக்கூடிய நிலையில் தற்போது எம்எல்சி பிரபாகர்  தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது கர்னூல் மாவட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Tags : MLC ,Telugu Desam , Telugu Desam MLC ,resigns
× RELATED கூட்டணிகளுக்கு 60 தொகுதிகள் தரமுடிவு...