×

ஆரணியாற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் பாலப்பணிகள், மந்த நிலையில் இருப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு!

திருவள்ளூர்:  தமிழக-ஆத்திர எல்லையான ஆரணியாற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தை விரைந்து முடிக்கவேண்டுமென பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஆந்திர மாநிலம் பிச்சாட்டூரில் உருவாகி ஆந்திராவின் சுருட்டப்பள்ளி வழியாக வந்து, தமிழக பகுதியான ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், ஆரணி மற்றும் பொன்னேரி வழியாக ஓடி இறுதியில் பழவேற்காடு அருகில் வங்கக்கடலில் ஆரணியாறு கலக்கிறது. ஊத்துக்கோட்டையிலிருந்து திருவள்ளூர் செல்வதற்கு ஆரணியாற்றை தரைமூலம் கடந்து மக்கள் இதுவரை பயணித்து வந்தனர். 2015ம் ஆண்டு பெய்த பெருமழை வெள்ளம் காரணமாக அந்த தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது. இதனால், ஊத்துக்கோட்டையிலிருந்து திருவள்ளூர் செல்வதற்கு வெங்கல் வழியாக 30 கிலோமீட்டர் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஆரணியாற்றின் குறுக்கே மேம்பாலம் அமைத்து தரவேண்டும் என்ற கோரிக்கையை பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் முன்வைத்த நிலையில், நெடுஞ்சாலை சார்பில் ஆற்றின் குறுக்கே 452 மீட்டர் நீளத்தில் மேம்பாலம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால், பணிகள் மெதுவாக நடைபெற்று வருவதாக பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் குற்றம் சாட்டுகின்றனர். பணிகளை விரைந்து முடித்து மேம்பாலத்தை திறக்க வேண்டுமென்பதே வாகன ஓட்டிகள் மற்றும் இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. இதற்கிடையே, மேம்பால பணிகள் குறித்து தேசிய நெடுஞ்சாலை துறையின் உதவிகோட்ட பொறியாளர் சிவகுமாரிடம் கேட்டபோது, வரும் மே மாதத்திற்குள் இப்பணிகள் நிறைவடைந்துவிடும் என தெரிவித்துள்ளார். அதன்பின்பு மக்களின் பயன்பாட்டிற்காக இம்மேம்பாலம் விரைவில் திறக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags : recession ,river , Oranges, bridges, recessions, the public. Accusation
× RELATED மங்களகோம்பை செல்லும் சாலையில் புலியூத்து ஆற்றின் குறுக்கே பாலம் தேவை