சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூபாய் 1096 குறைந்துள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூபாய் 4,020க்கும் ஒரு சவரன் ரூபாய் 32,160க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இரண்டு நாட்களில் 125 டாலர் குறைந்துள்ளதை அடுத்து தங்கம் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது.