×

நாடாளுமன்ற துளிகள்...

முக்கிய துறைமுகங்கள் ஆணைய மசோதா தாக்கல்
முக்கிய துறைமுக பொறுப்புக் கழக சட்டம் 1963-க்கு பதிலாக முக்கிய துறைமுகங்கள் ஆணைய மசோதா மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சர் மன்சுக் மண்டவியா மசோதாவை அறிமுகப்படுத்தி பேசுகையில், `‘நாட்டில் உள்ள 12 முக்கிய துறைமுகங்களின் செயல் திறன் மற்றும் போட்டியை அதிகரிக்கும் வகையில் இந்த மசோதா அறிமுகம் செய்யப்படுகிறது. முக்கிய துறைமுகங்களை தனியார் மயமாக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை. ஆனால், போட்டி சந்தையில் முக்கிய முடிவுகளை எடுக்கும் வகையில் கூடுதல் அதிகாரத்தை துறைமுகங்களுக்கு வழங்குவதாக இந்த மசோதா இருக்கும்,’’ என்றார்.

ரயில்வேக்கு தனி பட்ஜெட் எதிர்க்கட்சிகள் கோரிக்கை
ரயில்வே தொடர்பான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நேற்று மக்களவையில் நடைபெற்றது. அப்போது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ரயில்வேயை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசினர். காங்கிரஸ் எம்பி எம்கே ராகவன் பேசுகையில், ‘`ரயில்வே ஒரு சேவைத் துறை. ஏழை மக்களின் பயன்பாட்டுக்காக கொண்டு வரப்பட்டது. ஆனால், சமீபத்தில் தாக்கல் ெசய்யப்பட்ட மத்திய பட்ஜெட், தனியார் மயமாக்கலுக்கு அழைப்பு விடுப்பதாக உள்ளது,’’ என்றார். தொடர்ந்து பேசிய திமுக எம்பி பழனி மாணிக்கம், ‘‘ரயில்வேயை தனியார் மயமாக்குவதை நோக்கி பாஜ அரசு செல்கிறது. ஏர் இந்தியா விமான நிறுவனம் தனியார் மயத்தின் விளிம்பில் உள்ளது. ஏற்கனவே நிலம் மற்றும் கடல் வழி போக்குவரத்து தனியார் மயமாக்கப்பட்டு விட்டது. பல்வேறு ரயில்வே மண்டலங்களின் கோரிக்கைகள் குறித்து விவாதிப்பதற்கு ரயில்வேக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்வது அவசியம். முன்பு ரயில்வேக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது எம்பி.க்களின் ஆலோசனையை ரயில்வே அமைச்சர் கேட்டறிந்தார். இப்ேபாது அதுபோன்ற நிலை இல்லை,’’ என்றார்.

நிலக்கரி சுரங்க ஏலத்தில் கட்டுப்பாடுகள் நீக்கம்
கனிம திருத்த அவசர சட்டம் 2020-க்கு பதிலாக கனிமங்கள் திருத்த சட்ட மசோதா மக்களவையில் கடந்த வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்டது.   இந்த மசோதா நேற்று மாநிலங்களவையில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் மீது பல்வேறு கட்சிகளை சேர்ந்த 12 எம்பி.க்கள் பேசினர். மசோதா மீதான விவாதத்துக்கு பதில் அளித்து பேசிய நிலக்கரித்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, ‘`இந்த மசோதா நிலக்கரி மற்றும் சுரங்கத்துறையில் அந்நிய நேரடி முதலீட்டை அதிகரிக்க வகை செய்யும் என்பதுடன் பொருளாதாரத்தையும் வலுப்படுத்தும். 2.7 லட்சம் கோடி அளவுக்கு நிலக்கரி இறக்குமதி செய்யும் இந்தியாவில், இறக்குமதியை குறைக்கவும், இங்குள்ள நிலக்கரி வளத்தை பயன்படுத்தவும் வகை செய்யும். இது தவிர நிலக்கரி சுரங்க ஏலத்தில் ஏற்கனவே இருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு, வெளிநாட்டு உள்நாட்டு நிறுவனங்களை பங்கேற்க செய்யும்,’’ என்றார். பின்னர் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் மசோதாவுக்கு ஆதரவாக 83 எம்பி.க்களும், எதிராக 12 எம்பி.க்களும் வாக்களித்ததை  தொடர்ந்து. அது நிறைவேற்றப்பட்டது.



Tags : Parliament , Droplets ,Parliament
× RELATED இந்தியா அமல்படுத்தியுள்ள...