×

குறை தீர்க்கும் நாள் கூட்டம்

சென்னை: பொன்னனேரி கோட்டத்தில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘சென்னை மின் பகிர்மான வட்டம்/வடக்கு, பொன்னேரி கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளுக்கான மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் 13.03.2020அன்று வெள்ளிக்கிழமை காலை 11.00 மணியளவில் பொன்னேரி 33/11 கி.வோ. துணைமின் நிலைய வளாகத்தில் அமைந்துள்ள செயற்பொறியாளர்/இயக்கம் மற்றும் பராமரித்தல் /பொன்னேரி அலுவலகத்தில் நடைபெற உள்ளது. பொன்னேரி கோட்டத்திற்கு உட்பட்ட மின்நுகர்வோர் இக்குறைதீர்க்கும் நாளில் பங்கு பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது’ எனக்கூறப்பட்டுள்ளது.

Tags : meeting , Defective day, meeting
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...