×

கொரோனா பீதியால் தேக்கடியில் மார்ச் 31 வரை சுற்றுலா தலங்கள் மூடல்: கேரள வனத்துறை அறிவிப்பு

கூடலூர்: ‘கொரோனா’ பீதியால் தேக்கடியில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் மார்ச் 31 வரை மூடப்படுவதாக கேரள வனத்துறை அறிவித்துள்ளது. கேரள மாநிலத்தில் கொரோனா பராவுவதை தடுக்க அம்மாநில அரசு கடுமையான அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. இதன்படி, பெரியார் புலிகள் காப்பகத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களையும் வரும் 31ம் தேதி வரை மூடும்படி கேரள முதன்மை வனத்துறை தலைமை வனவிலங்கு வார்டன் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து பெரியாறு புலிகள் சரணாலய இணை இயக்குநர் சில்பா வி குமார் தேக்கடி படகு சவாரி, சுற்றுலா தங்குமிடங்கள், கெவி சஃபாரி மற்றும் பெரியார் புலிகள் சரணாலயப்பகுதியில் உள்ள முகாம்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளார்.

இதையடுத்து நேற்று முதல் தேக்கடியில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டன. இதன்காரணமாக குமுளி, தேக்கடி படகு நிறுத்தப்பகுதிகள் களையிழந்துள்ளது. கேரளாவில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் தேக்கடியும் ஒன்றாகும். இங்குள்ள குளுமையான சீதோஷ்ண நிலை மற்றும் அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவே ஏரியில் படகு சவாரி ஆகியவை வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்ததாகும். இந்நிலையில் இதனையறிமால் தேக்கடிக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.


Tags : Kerala forest department ,closure ,tourist spots ,Thekkady Kerala Forest Department ,Thekkady , Corona panic, Thekkady, tourist attractions, closures
× RELATED கேரள வனத்துறை அலட்சியத்தால் 2...