×

கோடை காலத்தை முன்னிட்டு நாகர்கோவில் - தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்

நெல்லை: கோடை காலத்தை முன்னிட்டு நாகர்கோவில்- தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. தாம்பரம் - நாகர்கோவில் இடையே சிறப்பு கட்டண ரயில்கள்(எண்.06005) புதன்கிழமை தோறும் இயக்கப்பட உள்ளன. வரும் ஏப்ரல்8,15,22,29, மே 6,13,20,27, ஜூன்3,10,17,24 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் இந்த ரயில்கள் தாம்பரத்தில் இருந்து பிற்பகல் 4.45 மணிக்கு புறப்படும். நெல்லை வழியாக மறுநாள் வியாழக்கிழமை காலை 5.25 மணிக்கு நாகர்கோவில் போய் சேரும். நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கு வியாழன் தோறும் சிறப்பு கட்டண ரயில்கள் (எண்.06006) இயக்கப்பட உள்ளன.

ஏப்ரல் 9, 16,23,30, மே 7,14,21,28, ஜூன் 4,11, 18, 25 மற்றும் ஜூலை2 ஆகிய தேதிகளில் இந்த ரயில்கள் நாகர்கோவிலில் இருந்து இரவு 7.40 மணிக்கு புறப்படும். மறுதினம் வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு சென்னையை சென்றடையும்.
இந்த ரயில்கள் வள்ளியூர், நெல்லை, ேகாவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருதாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய நிறுத்தங்களில் நின்று செல்லும். 3 ஏசி பெட்டிகளும், 13 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளும், 2 லக்கேஜ் பெட்டிகளும் இதில் இடம் பெற்றிருக்கும்.

Tags : Nagercoil ,Tambaram , Nagercoil - Tambaram, Special Trains
× RELATED நாகர்கோவிலில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் குளோரின் வாயு கசிவு