×

கடுமையாக உயர்வதும் சரிவதும் வாடிக்கையானது... தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.33,312-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.33,312-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.50 குறைந்து ரூ.4,164-க்கும் வெள்ளியின் விலை கிராமிற்கு 80 காசுகள் உயர்ந்து ரூ.50.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்று காலை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.33,472-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.33,312-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  கடந்த இரண்டு மாதங்களாக தங்கத்தின் விலை உயர்ந்துக்கொண்டே வந்த நிலையில் அவ்வப்போது ஏற்றத்தாழ்வுடன் காணப்படுகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்தால் அதிகப்படியாக உயர்வதும், குறைந்தால் மட்டும் சிறிதளவு குறைவது என்பதில் தற்போது மாற்றம் ஏற்பட்டு வருகிறது, இதனால் நகை வாங்குவோர் குழப்பம் அடைகின்றனர்.

நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியை சந்தித்து வரும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பொருளாதாரம் மேலும் வீழ்ச்சியை நோக்கி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் பொருளாதார பங்கு சந்தையில் முதலீடு செய்வதை தவிர்த்து, தங்கத்தின் மீது செலுத்திய முதலீட்டை  திருப்பியுள்ளனர். அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இதுபோன்ற காரணங்களால் தங்கத்தின் விலை கடுமையான உயர்வதும் மெத்தனமாக குறைவதும் வாடிக்கையாகி வருகிறது.

Tags : sovereign , Gold, shaving, Rs.33,312, sale
× RELATED நகை வாங்க நல்ல நேரம்! : ஆபரணத்...