×

தாராபுரம் அருகே வேகமாக பரவி வரும் மர்ம காய்ச்சல்: வீடுகளில் முடங்கிய கிராம மக்கள்

தாராபுரம்: தாராபுரம் அருகே எஸ். அம்மாபட்டி கிராமத்தில் வேகமாக பரவி வரும் மர்ம காய்ச்சலால் கிராம மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே பொள்ளாச்சி செல்லும் சாலையில் எஸ். அம்மாபட்டி கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் விவசாயிகள், விவசாயக் கூலித் தொழிலாளர்கள் என 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக மர்ம காய்ச்சல் பரவி கிராம மக்களை முடக்கியுள்ளது. குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் காய்ச்சல் பரவி கை, கால் மூட்டுகளில் வீக்கம் ஏற்பட்டு நடக்க  முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கைத்தடி உதவியுடன் நடக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

இதில் ஓரளவு வசதி படைத்த சிலர் தாராபுரம், திருப்பூர், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். வேகமாக பரவி வரும் மர்ம காய்ச்சல் குறித்து மாவட்ட மருத்துவ குழுவினர் கிராமத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்து, உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். கடந்த 15 நாட்களுக்குள் மேலாக வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டில் முடங்கிக் கிடப்பதால், தங்களுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது என கிராம மக்கள் கவலையடைந்துள்ளனர்.

Tags : Tarapuram ,homes , Mysterious fever
× RELATED திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சார்பு...