×

பாதாள சாக்கடை சீரமைப்பு

பெரம்பூர்: சென்னை மாநகராட்சி 8வது மண்டலம் 96வது வார்டுக்கு உட்பட்ட அயனாவரம் பொன்னுசாமி தெருவில் பாதாள சாக்கடை மென்ஹோல் உடைந்து, திறந்த நிலையில் இருப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் இருந்தது. இதனால் அந்த பகுதியில் விபத்து மற்றும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதாக தினகரன் நாளிதழில் நேற்று முன்தினம் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதனையடுத்து, அங்கு வந்த குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரிய அதிகாரிகள் உடனடியாக அந்த பகுதியை சுத்தம் செய்து சிமென்ட் மூலம் புதிதாக கான்கிரீட் மேன்ஹேல்கள் அமைத்தனர்.



Tags : Sewer ,renovation
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...