×

ரயில்வே சாலை செல்லும் பாதையில் உள்ள பாலம் விரிவாக்க கான்கிரீட் போடும் பணி: இருபுறமும் 10 மீட்டர் விரிவுப்படுத்தப்படுகிறது

நாகர்கோவில்: நாகர்கோவில் கோட்டார் ரயில்நிலையம் செல்லும் பகுதியில் காலை, மாலை வேளையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இதனால் மாலை நேரங்களில் ரயிலை பிடிக்க செல்லும் பொது மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனை தொடர்ந்து கோட்டாரில் இருந்து ரயில்நிலையம் செல்லும் சாலையை விரிவாக்கம் செய்ய ரயில் பயணிகள் மற்றும் பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர். தன் அடிப்படையில் கோட்டார் மார்க்கெட் பகுதியில் ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி சார்பில் அகற்றப்பட்டது. தொடர்ந்து அந்த சாலை இரண்டரை மீட்டர் அளவிற்கு அகலம் ஆகியுள்ளது. இந்த சாலை அகலப்படுத்தப்பட்டுள்ளதால், இருவழிச்சாலையாக பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தப்படியாக ரயில் நிலையம் செல்லும் பாதையில் 2 தரைபாலங்கள் உள்ளன.

இந்த பாலங்களையும் விரிவுப்படுத்த மாநகராட்சி முடிவு ெசய்தது. அதன்படி முதல் பாலம் மூன்றரை மீட்டர் அளவிற்கு கூடுலாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மற்றொரு பாலம் தற்போது 8.5 மீட்டர் அகலத்திற்கு உள்ளது. இந்த பாலத்தின் ஒரு புறம் 5 மீட்டர் வீதம் இருபுறமும் அகலப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த பாலம் 18.5மீட்டர் அகலத்திற்கு மாற்றப்படவுள்ளது. இந்த பணி கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு, பாலத்தின் அருகே பொக்லைன் எந்திரம் மூலம் பரக்கின்காலில் பள்ளம் தோண்டப்பட்டது. நேற்று கான்கிரீட் போடும் பணி நடந்தது. இந்த பணி மாநகராட்சி பொதுநிதியில் நடந்து வருகிறது. இந்த பாலம் விரிவுபடுத்தியபிறகு ரயில் நிலையம் செல்லும் பயணிகளுக்கு போக்குவரத்து நெருக்கடி இருக்காது. மேலும் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் உத்தரவின்பேரில் பரக்கின்கால் கால்வாயில் மண்டிகிடக்கும் மண்ணையும் அகற்றும் பணி நடந்து வருகிறது.

Tags : bridge ,Bridge of Concrete Laying ,Railway Road , Railway Road, Bridge, Concrete
× RELATED பாம்பன் சாலை பாலத்தில் இணைப்பு ஸ்பிரிங் பிளேட்கள் சேதம்