×

லாபத்திற்காக முகமூடிகளை மறுவிற்பனை செய்தால் ரூ.7 லட்சம் அபராம் அல்லது ஒரு ஆண்டு சிறை: ஜப்பான் அரசு எச்சரிக்கை

டோக்கியோ: லாபத்திற்காக முகமூடிகளை மறுவிற்பனை செய்தால் ரூ.7 லட்சம் அபராம் அல்லது ஒரு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என ஜப்பான் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனாவை ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. சீனாவின் அண்டை நாடான ஜப்பானில் இந்நோய் பரவி வருகிறது. எனவே அங்கு பொதுமக்களும், மருத்துவமனை ஊழியர்களும் முகமூடிகளை மாட்டிக் கொண்டு அன்றாட பணிகளை கவனித்து வருகின்றனர். ஒரு நாள் பயன்படுத்திய முகமூடியை மறுநாள் பயன்படுத்தக் கூடாது என்பதால் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது இதனால் முகமூடிகளின் விலையும் இரு மடங்கு மூன்று மடங்கு என அதையும் தாண்டி விலை ஏற்றம் கண்டு, விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஜப்பான் மட்டுமல்லாது, உலகளவில், நவீன ரக முகமூடிகளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரானா எதிரொலியாக, மருத்துவ பொருட்களுக்கு அதிகரித்துள்ள தேவையை சாதகமாக்கிக் கொண்டு, அதிக லாபத்துக்கு முகமூடிகளை மறுவிற்பனை செய்தால், ஓர் ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என ஜப்பான் அரசு கடுமையாக எச்சரித்துள்ளது. இதுமட்டுமின்றி, இந்திய ரூபாய் மதிப்பில் 7 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதியானது, மார்ச் 15ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முகமூடிகளை வாங்கிய விலைக்கே மறுவிற்பனை செய்துகொள்ளலாம் என அந்நாட்டின் வர்த்தக அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


Tags : Japan ,jail ,Prisoner , Corona virus, Japan, mask, reselling, jail sentence, fine
× RELATED ஜப்பான், இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!!