×

19 எம்.எல்.ஏக்கள். ராஜினாமாவால் ம.பி.யில் கவிழ்கிறது காங்கிரஸ் ஆட்சி : பெரும்பான்மைக்கு 105 தேவைப்படும் நிலையில் பாஜக -107, காங்கிரஸ் -102 பலம்

போபால் : மத்தியப் பிரதேசத்தில் முந்தைய நிலவரப்படி மொத்தம் உள்ள 230 இடங்களில் இரண்டு இடங்கள் காலியாக இருந்தன. அதனால் பெரும்பான்மைக்கு 115 எம்எல்ஏக்கள் தேவைப்பட்டது. மத்தியப் பிரதேச சட்டப்பேரவையில்  காங்கிரசில் 114 எம்எல்ஏக்களும், பாஜகவில் 107 சட்டமன்ற உறுப்பினர்களும் உள்ளனர். மற்ற கட்சிகளை சேர்ந்த 7 பேர் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளித்து வந்ததால்,  121 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் இதுவரை கமல்நாத் தலைமையில் ஆட்சி நடைபெற்று வந்தது.

இந்நிலையில் மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி, ஆட்சியில் முக்கிய பொறுப்பு தராததால் அதிருப்தியில் இருந்த காங்கிரஸ் தலைவர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா உள்பட அவரின் ஆதரவாளர்களான 19 காங்கிரஸ் எம்எல்ஏக்களும் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். 6 அமைச்சர்கள் உள்பட 19 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் தங்களது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் அளித்துள்ளனர். இதையடுத்து காங்கிரசின் பலம் 95 ஆக குறைந்துள்ளது. மற்ற கட்சிகளை சேர்ந்த 7  எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்தாலும் கூட காங்கிரசின் எண்ணிக்கை 102 ஆக மட்டுமே அதிகரிக்கும்.

இதனிடையே ஜோதிராதித்ய சிந்தியா உட்பட  ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் பதவி விலகிய பட்சத்தில், காலியாக உள்ள இடங்கள் 21 ஆக அதிகரித்துள்ளது. எனவே, மொத்தம் உள்ள 209 இடங்களில் பெரும்பான்மையை நிரூபிக்க 105 எம்எல்ஏக்கள் இருந்தால் போதுமானது. ஆனால் மற்ற கட்சிகளைச் சேர்ந்த 7 எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்தாலும் கூட காங்கிரசின் எண்ணிக்கை 102 ஆக மட்டுமே. எனவே 107 சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட பாஜக மத்திய பிரதேசத்தில் ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகி உள்ளது.


Tags : Congress-102 ,resignation , Madhya Pradesh, Jyotir Aditya Scindia, Congress, Venugopal, Resignation
× RELATED குஜராத்தில் காங். எம்எல்ஏ திடீர் ராஜினாமா