×

நடமாடும் மருத்துவ மையங்களுக்காக சன் டி.வி. ரூ.1.06 கோடி நிதி உதவி

சென்னை: ஏழை மக்களின் இருப்பிடங்களுக்கே சென்று மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கான நடமாடும் மருத்துவ மையங்களுக்காக சன் டி.வி. ரூ.1.06 கோடி நிதி உதவி அளித்துள்ளது. பின்தங்கிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல், கல்வி நிலையங்களில் அடிப்படைக் கட்டமைப்பை உருவாக்குதல், மாணவர்களுக்கான கற்றல் சூழலை மேம்படுத்துதல், இளைஞர் நலன் உள்ளிட்ட பல்வேறு சமூக மேம்பாட்டுப் பணிகளுக்காக சன் டி.வி. தொடர்ந்து நிதி உதவி அளித்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, தெலங்கானா மாநிலம் வாரங்கல் மற்றும் கர்நாடக மாநிலம் யாத்கிர் மாவட்டங்களில் ஏழை மக்களுக்கு மருத்துவ வசதி அளிப்பதற்கான நடமாடும் மருத்துவ சிகிச்சை திட்டத்திற்காக சன் டி.வி. 1 கோடியே 6 லட்சத்து 7,300 ரூபாய் நிதி உதவி அளித்துள்ளது. இதற்கான காசோலையை, ஸ்மைல் பவுண்டேஷன் தலைமை செயல் அதிகாரி சஞ்சீவ் தாம், துணைத் தலைவர் சப்னா ரவீந்திரன் ஆகியோரிடம் சன் டி.வி. சார்பில் காவேரி கலாநிதி மாறன் வழங்கினார். ஏழை எளியோர் நலன், சுகாதார மேம்பாடு, அடிப்படைக் கட்டமைப்பு உள்ளிட்ட சமூக மேம்பாட்டுப் பணிகளுக்காக சன் டி.வி. மற்றும் சன் பவுண்டேஷன் இணைந்து இதுவரை ரூ.105 கோடி நிதி உதவி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : centers ,Sun TV ,Rs , Mobile Medical Center, Sun TV, Rs
× RELATED 3000 பேருக்கு நலத்திட்ட உதவி