×

கொரோனா வைரஸ் பரவல் எதிரொலி முக கவசம் அணிந்து பணியாற்ற ரயில்வே போலீசாருக்கு உத்தரவு: தமிழகம் முழுவதும் அமலுக்கு வந்தது

சேலம்: கொரோனா வைரஸ் பரவலையடுத்து முக கவசம் அணிந்து பணியாற்ற ரயில்வே போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை தமிழகம் முழுவதும் ரயில்வே போலீசார் அமலுக்கு கொண்டு வந்துள்ளனர். தமிழகத்தில் ரயில்வே ஸ்டேஷன்களில் மக்கள் அதிகம் கூடுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருமி நாசினி மருந்துகள் தெளிக்கப்பட்டு வருகிறது. இதுபோக தற்போது, ரயில்வே போலீசார் அனைவரும் முக கவசம் அணிந்து தான் பணியாற்ற வேண்டும் என ரயில்வே போலீஸ் டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை நேற்றைய தினம், மாநிலம் முழுவதும் உள்ள ரயில்வே போலீசார் அமலுக்கு கொண்டு வந்துள்ளனர்.ரயில்வே ஸ்டேஷனில் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபடும் ரயில்வே போலீசார், ஏராளமான ரயில் பயணிகளை சந்திக்க நேரிடுகிறது. அதனால், அவர்கள் தற்காப்பிற்காக முக கவசம் அணிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.

சேலம் ரயில்வே போலீசார், நேற்று காலை முதல் முக கவசம் அணிந்து கொண்டு பணியாற்றினர். பிளாட்பார்ம் ரோந்து மற்றும் ஸ்டேஷனில் பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் இளவரசி, எஸ்ஐ பாலமுருகன் உள்ளிட்ட அனைத்து போலீசாரும் முக கவசம் அணிந்திருந்தனர். இதுபற்றி போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘‘தமிழக ரயில்வே ஸ்டேஷன்களுக்கு வட மாநிலங்களில் இருந்தும், கேரளாவில் இருந்தும் அதிகப்படியான பயணிகள் வந்து ோசெல்கின்றனர். அதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தீவிரமாக எடுத்துள்ளனர். சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை பகுதிகள், கேரள மார்க்கத்தில் இருப்பதால், ரயில்வே போலீசார் கட்டாயம் முக கவசம் அணிந்திருக்க வேண்டும் என உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அதனை மாநிலம் முழுவதும் ரயில்வே போலீசார் பின்பற்றியுள்ளோம்,’’ என்றனர்.

Tags : Railway cops ,Tamil Nadu , corona virus, spread, serve, Tamil Nadu,force
× RELATED தமிழ்நாட்டிலுள்ள ஓவிய, சிற்பக்...