×

ரூ.13 கோடி செலவில் புனரமைக்கப்பட்ட 8 வரலாற்று சின்னங்களை முதல்வர் திறந்து வைத்தார்

சென்னை: ரூ.13 கோடி செலவில் புனரமைக்கப்பட்ட 8 வரலாற்று சின்னங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவித் திட்டத்தின் கீழ், தொல்லியல் துறை சார்பில் ரூ.13.27 கோடி செலவில் புனரமைப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட மதுரை திருமலை நாயக்கர் அரண்மனை, சிவகங்கை மருதுபாண்டியர் கோட்டை, கள்ளக்குறிச்சி தியாகதுருகம் மலைக்கோட்டை, கன்னியாகுமரி உதயகிரிக் கோட்டை, திருவண்ணாமலை  சின்னையன்குளம், பூண்டி அருகர்கோயில், தடாகபுரீஸ்வரர் கோயில் மற்றும் கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோயில் ஆகிய 8 பாதுகாக்கப்பட்ட வரலாற்றுச் சின்னங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமை செயலகத்தில் இருந்து கானொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். மேலும், தொல்லியல் துறையில் தொல்லியல் அலுவலர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள்,  வீரபாண்டிய கட்டபொம்மனின்  நேரடி வாரிசான ஜெகவீரபாண்டிய சுப்பிரமணிய கட்டபொம்மு துரை என்பவரின்  மகன் கணபதி ராஜாவுக்கு மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையிலும், வீ.முருகதேவிக்கு பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மன்கோட்டை நினைவுச் சின்னத்திலும்,  சிறப்பு நேர்வாக கருணை அடிப்படையில் காவலர் பணியிடத்திற்கான  பணி நியமன ஆணைகளை வழங்கினார்….

The post ரூ.13 கோடி செலவில் புனரமைக்கப்பட்ட 8 வரலாற்று சின்னங்களை முதல்வர் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Chennai ,Edappadi Palaniswami ,Dinakaran ,
× RELATED அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்கள்: எடப்பாடி வேண்டுகோள்