×

கொரோனா பாதிப்பு எதிரொலி: நிகழ்ச்சிகள் நடத்துவதை தவிர்க்க வேண்டும்: உணவகங்களுக்கு அறிவுறுத்தல்

சென்னை : கொரோனா பாதிப்பு எதிரொலியாக உணவகங்களில் நிகழ்ச்சிகள் நடத்துவதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. உரிய முன்ெனச்சரிக்கை நடவடிக்கையை கடைபிடிக்க வேண்டும் என்று  உத்தரவிடப்பட்டுள்ளது.   
தமிழகத்தில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 15வயது  சிறுவனுக்கு கொரோனா அறிகுறி இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இருவருக்கும் சென்னை ராஜிவ்காந்தி பொது மருத்துவமனையில்  தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வெளிநாடுகளில் விமானம் மற்றும் கப்பல் மூலம் சென்னை வருபவர்கள் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். மேலுல் கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள்  மற்றும் அவர்களுக்கு உறவினர்களும் தொடர்ந்து காண்காணிப்பட்டுவருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா பாதிப்பு தடுக்க அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் பொதுமக்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் பெருமளவு ஒன்று கூடுவதை  தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் உள்ள உணவகங்களில் நிகழ்ச்சிகள் நடத்துவதை தவிர்க்க வேண்டும் என்று மாநகராட்சி ஊழியர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். நிகழ்ச்சிகளை நடத்தும்போது  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். இதைத்தவிர்த்து சென்னை மாநகராட்சி பள்ளிகளில் உரிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்றும்  அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தலின்படி அடிக்கடி, கைகளை தூய்மையாக வைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் சளி காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரிடம்  சிகிச்சை பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Tags : Corona ,restaurants , Corona impact echo: Avoid running concerts: instructing restaurants
× RELATED KP.2 என்ற புதிய வகை கொரோனாவால்...