×

தனிப்படை கலைப்பு: 7 எழுத்து அதிகாரி செம உற்சாகம்

குமரி மாவட்டம் வழியாக மணல் கடத்தலை தடுக்கும் வகையில் எஸ்.ஐ. திலீபன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு இருந்தது. மணல் கடத்தி வரும் லாரி, டெம்போக்களை தனிப்படை பிடித்ததால், மாமூல் வாங்கி வந்த போலீசார், எஸ்.ஐ. திலீபன் மீது ஆத்திரத்தில் இருந்தனர். இந்த நிலையில் ஆளுங்கட்சிக்கு மிகவும் நெருக்கமானவரின் பொக்லைன் மற்றும் டெம்போவை செம்மண் கடத்தல் பிரச்னையில், ஆரல்வாய்மொழி அருகே திலீபன் மடக்கினார். மேலிட முக்கிய புள்ளி பெயரை கூறி 2, 3 முறை தப்பிய அந்த வாகனங்கள் 3வது முறையாகவும் மணல் கடத்தி ெகாண்டு இருந்த போது அதே எஸ்.ஐ.யிடம் சிக்கியது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த முக்கிய புள்ளி காவல்துறை உயர் அதிகாரிகளிடம் பேசி, எஸ்.ஐ.யை மாற்றுங்கள் என உத்தரவிட்டார்.

ஆளுங்கட்சியின் முக்கிய பிரதிநிதி மூலம் நெருக்கடி கொடுத்து தனிப்படையில் இருந்து திலீபனை கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றினர். இந்த தனிப்படையில் நியமிக்க 2, 3 எஸ்.ஐ.க்களின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் இந்த எஸ்.ஐ.க்கள் மீது ஏற்கனவே மாமூல் புகார் உள்ளதால், இந்த சமயத்தில் இவர்களை போட்டால் சிக்கல் ஆகி விடும். எனவே தனிப்படையை கலைத்து விட்டு, சில மாதம் கழித்து புதிதாக தனிப்படை அமைக்கும் போது பார்த்துக் கொள்வோம் என கூறி இப்போது மணல் கடத்தல் தனிப்படையை முற்றிலும் கலைத்து விட்டார்கள். இதனால் மணல் கடத்தல் ஜரூராக நடக்கிறதாம், மாமூல் வாங்கி வந்த போலீசார் காட்டில் பண மழை கொட்டுகிறதாம். குறிப்பாக 7 எழுத்து கொண்ட காவல்துறை அதிகாரி செம உற்சாகத்தில் உள்ளார்.

Tags : Writing Officer , Individuality, dissolution, excitement
× RELATED ஆவடி அருகே 4 கிலோ கஞ்சா பறிமுதல்