×

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க வணிகர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்: விக்கிரமராஜா வேண்டுகோள்

சென்னை: கொரோனா வைரஸ் பரவாமல் தடுத்திட வணிகர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று விக்கிரமராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்ட அறிக்கை: அண்மை காலமாக உலகம் முழுமையும் கொரானோ வைரஸ் வெகு வேகமாக சீனா தொடங்கி தமிழ்நாடு வரை பரவி மக்களின் இன்னுயிரை பறித்து வருகிறது. இந்தவகை வைரஸ் பரவி வருவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்திருந்தாலும், வணிகர்கள் இதை பொதுமக்களிடமும் நம் வணிகக் குடும்பங்களிடையே அதீத விழிப்புணர்வை ஏற்படுத்தி வீண் உயிர்பலிகளை தடுத்திடுவது நமது தலையாய கடமையாகும்.

நாட்டில் இக்கட்டான சூழ்நிலை நிலவும் நிலையில், சுகாதார அவசர பிரகடனப்படுத்தும் விதமாக வணிகர்கள், தங்களின் அரசு மற்றும் மக்கள் பாலமாக இயங்கும் பணியினை செவ்வனே தொடர்ந்திட, மக்களிடையே சுத்தமான, சுகாதாரமான சூழ்நிலைகளை மேம்படுத்திக் கொள்வதற்கான பிரசார யுத்திகள், துண்டு பிரசுரங்கள் மேலும் தொடர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களை அரசு அறிவித்துள்ள சுகாதார மையங்களுக்கு கொண்டு சென்றிட அறிவுறுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தி, கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுத்திட பேரமைப்பு நிர்வாகிகளும் வணிகர்களும் முழு வேகத்துடன் செயல்பட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Traders ,Wickremaraja Traders , Corona virus, merchants, vigilantes, vikramaraja
× RELATED நீடாமங்கலத்தில் மேம்பாலப்பணியை...