×

பணி நீக்கம் செய்யப்பட்டதால் ஆத்திரம்: அரசு வங்கி, அதிகாரிகள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு: முன்னாள் உதவி பொது மேலாளருக்கு வலை

சென்னை: மத்திய அரசு வங்கி மற்றும் உயர் அதிகாரிகள் குறித்து சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து அவதூறு செய்திகளை பரப்பிய முன்னாள் உதவி பொது மேலாளரை போலீசார் தேடி வருகின்றனர். தி.நகரில் உள்ள ரெப்கோ வங்கியின் அதிகாரி வெங்கடாச்சலம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்தார். அதில், பர்மா மற்றும் இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய மக்களின் மறுவாழ்விற்காக மத்திய அரசால் ரெப்கோ வங்கி தொடங்கப்பட்டது. சென்னை தி.நகரில் உள்ள இந்த வங்கியின் தலைமை அலுவலகத்தில் திருவேங்கடம் (60) என்பவர், உதவி பொது மேலாளராக பணிபுரிந்து வந்தார்.  இவர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு, வங்கியில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டார்.

இதனால், வங்கி மீதும், வங்கியின் உயர் அதிகாரிகளின் மீதும் அவதூறு கருத்துக்களையும், வங்கியின் செயல்பாட்டுக்கு எதிரான பொய்யாக பதிவுகளையும் சமூகவலைதளங்களில் பதிவு செய்து வருகிறார். தி.நகரில் உள்ள தலைமை அலுவலகத்தின் நுழைவாயிலில் நின்று கொண்டு வங்கி ஊழியர்களையும், கடன் வாங்க வரும் பொதுமக்களையும் வங்கிக்குள் செல்லாமல் தடுத்து வருகிறார்.  இதுபற்றி கேட்டால், ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என கூறியிருந்தார். இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில், முன்னாள் வங்கி உதவி பொது மேலாளர் திருவேங்கடம், ரெப்கோ வங்கி மற்றும் அதில் வேலை செய்யும் உயர் அதிகாரிகள் குறித்தும் சமூகவலைதளங்களில் அவதூறாக பதிவு செய்தது உறுதியானது. அதைதொடர்ந்து அவர் மீது ஐபிசி 294(பி), 353, 448, 506(i) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு தலைமறைவாக உள்ள திருவேங்கடத்தை தேடி வருகின்றனர்.



Tags : government banks ,assistant general manager , Dismissal, government banking, authorities, social networking, libel
× RELATED செங்கல்பட்டு நகர அரசு வங்கிகளில் சமூக...