×

படித்தது 10ம் வகுப்பு; பார்த்தது டாக்டர் பணி டிக்-டாக் நண்பருடன் சேர்ந்து ‘ட்ரீட்மென்ட்’ போலி பெண் டாக்டர் சிக்கினார்

தொண்டி: தொண்டி பகுதியில் 10ம் வகுப்பு வரை படித்து விட்டு, டிக்-டாக்கில் பழகிய நண்பருடன் சேர்ந்து, மருத்துவம் பார்த்த போலி பெண் டாக்டரை போலீசார் கைது செய்தனர். இவருக்கு உதவியாக இருந்தவர்களையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.தூத்துக்குடி மாவட்டம், ஏரல் கிராமத்தை சேர்ந்தவர் ராஜலட்சுமி (40). இவர், ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் நிலா கிளினிக் என்ற பெயரில் மருத்துவமனை துவங்கி சிகிச்சை அளித்து வந்தார். மேலும், மங்கலக்குடியிலும் மாறன் கிளினிக் என்ற பெயரில் மருத்துவமனை நடத்தி வந்துள்ளார்.சில நாட்களுக்கு முன்பு தொண்டியில் உள்ள கிளினிக்கில் அளித்த தவறான சிகிச்சையில் 60 வயதான மூதாட்டி உயிரிழந்தார். இதையடுத்து உறவினர்கள் கிளினிக்கை முற்றுகையிட்டதால், ராஜலட்சுமி தலைமறைவானார். பொதுமக்கள், பெண்ணின் உறவினர்கள் தொண்டி போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தனர்.

 இதையடுத்து போலீசார் வழக்கு பதிந்து, ராஜலட்சுமியை தேடி வந்தனர். அதன்பின்னரே இவர் 10ம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு சிகிச்சை அளித்து வந்தது தெரிந்தது. நேற்று முன்தினம் கிளினிக்கில் பொருட்களை எடுக்க வந்த ராஜலட்சுமியை, பொதுமக்கள் பிடித்து தொண்டி போலீசில் ஒப்படைத்தனர். சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் எஸ்பி வருண்குமார் கிளினிக்கை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். ராஜலட்சுமியிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.விசாரணையில் கிடைத்த தகவல்கள் வருமாறு:ராஜலெட்சுமிக்கு திருமணமாகி 2  குழந்தைகள் உள்ளன. கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த இவருக்கு, சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே  கோட்டையூர் ஸ்ரீராம் நகரை சேர்ந்த சுரேந்தர் என்பவருடன் டிக்-டாக்  முலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் இணைந்து மருத்துவம் பார்த்து வந்துள்ளனர். பத்தாம் வகுப்பு வரை மட்டுமே  படித்த ராஜலட்சுமி, எம்.பி.பி.எஸ்., டி.ஜி.ஓ. படித்துள்ளதாக பலகை மாட்டி விட்டு சிகிச்சை அளித்து வந்துள்ளார். இவருக்கு உதவியாக செல்வம், பீட்டர், கலந்தர் ஆஷிக் ஆகியோரும் இருந்துள்ளனர். இவ்வாறு விசாரணையில் தெரியவந்தவுடன், ராஜலட்சுமி, சுரேந்தர், கலந்தர் ஆசிக், செல்வம், பீட்டர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

Tags : Doctor ,Treat ,Dr ,Dick-Dog Friend 'Treatment' Fake Girl ,The Doctor , , Tic-Tac-Toe , Fake ,female doctor, trapped
× RELATED திண்டுக்கல் ராஜக்காபட்டியில்...