×

திருட்டில் ஈடுபட்ட 39 பேர் சிக்கினர்

சென்னை: சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 39 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 65 கிராம் தங்கம் மற்றும் ரூ.72.71 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. பெருநகர காவல் எல்லையில் கடந்த 13ம் தேதி முதல் 19ம் தேதி வரையிலான 7 நாட்களில் செல்போன் பறிப்பு, திருட்டு தொடர்பாக வந்த புகார்களின் படி, தனித்தனியாக 32 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. அதைதொடர்ந்து திருட்டு உள்ளிட்ட வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டதாக 6 சிறுவர்கள் உட்பட 34 பேரை போலீசார் கைது ெசய்தனர். அவர்களிடம் இருந்து 65 கிராம் தங்கம், 80 கிராம் வெள்ளி பொருட்கள், 7 செல்போன்கள், ரூ.72,71,521 ரொக்கம், ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள், 2 கார் பேட்டரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

The post திருட்டில் ஈடுபட்ட 39 பேர் சிக்கினர் appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED திருவல்லிக்கேணி பகுதிகளில் பைக்கில்...