×

10ம் வகுப்பு ஹால்டிக்கெட் 11ம் தேதி முதல் வினியோகம்

சென்னை: பத்தாம் வகுப்பு தேர்வு எழுத உள்ள பள்ளி மாணவர்களுக்கு 11ம் தேதி முதல் ஹால்டிக்கெட்டுகள் வினியோகம் செய்யப்படும்  என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. பிளஸ் 2 தேர்வுகள் கடந்த 2ம் தேதி தொடங்கின. அதைத் தொடர்ந்து பிளஸ் 1 வகுப்புக்கான தேர்வு 4ம் தேதி தொடங்கியது. இரண்டு  வகுப்புகளுக்கான தேர்விலும் இதுவரை மொழிப்பாடத் தேர்வுகளான தமிழ், ஆங்கிலத் தேர்வுகள் நடந்து முடிந்துள்ளன. பிளஸ் 1 ஆங்கிலம் நேற்று  நடந்தது.

இந்நிலையில், 10ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு 17ம் தேதி தொடங்க உள்ளது. பள்ளிகள் மூலம் 10ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 11ம்  தேதி முதல் ஹால்டிக்கெட்டுகள் வினியோகம் செய்யப்படும். அதனால் அந்தந்த பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் அந்த பள்ளியின் யூசர் ஐடியை  பயன்படுத்தி www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில்  11ம் தேதி பிற்பகல் முதல் ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு  வினியோகம் செய்ய வேண்டும்.


Tags : Class Halliday , 10th Class, Halliday,11th
× RELATED மாநகர பேருந்துகளில் மின்னணு...