×

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக விமான நிலையங்களில் மருத்துவ பரிசோதனை கட்டாயம் : டெல்லி விமான நிலையத்தை ஆய்வு செய்த பின் அமைச்சர் பேட்டி

டெல்லி : கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அனைத்து பன்னாட்டு விமான நிலையங்களிலும் பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனையை மத்திய அரசு கட்டாயமாக்கி உள்ளது. இத்தாலியில் இருந்து இந்தியாவுக்கு வந்துள்ள சுற்றுலா பயணிகளில் சிலருக்கு தொற்று இருந்ததால் வெளிநாட்டினர் வருகைத் தரும் பன்னாட்டு விமான நிலையங்களில் மருத்துவ பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் இந்திரா காந்தி பன்னாட்டு விமான நிலையத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் நேரில் ஆய்வு செய்தார்.
பயணிகளுக்கு நடத்தப்படும் மருத்துவ பரிசோதனையை அவர் பார்வையிட்டார்.

இது குறித்து நிரூபர்களிடம் பேசிய ஹர்ஷவர்தன், விமான நிலையங்களில் மருத்துவப் பரிசோதனையை தீவிரப்படுத்தி உள்ளோம்.வெளிநாட்டில் இருந்து வருகைத் தரும் அனைவரும் சோதனைக்கு உட்படுத்தப்படுவர்.இதனை மேற்பார்வையிட சுகாதாரத்துறை கூடுதல் செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. விமான நிலைய அதிகாரிகளும் மருத்துவர்களும் மருத்துவப் பரிசோதனை பணியில் ஈடுபட்டுள்ளனர்.சென்னை, பெங்களூர், ஹைதரபாத் உள்ளிட்ட பல்வேறு விமான நிலையங்களிலும் மருத்துவ பரிசோதனையை அதிகாரிகள் தீவிரப்படுத்தி உள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சென்னையில் 3 பன்னாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளனர். இந்திய துறைமுகங்களில் பன்னாட்டு கப்பல்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tags : airports ,examination ,airport Airports ,inspection ,interview ,Minister ,Delhi ,airport , Corona, Threat, Medical Examination, Health Department, Minister Harshavardhan, Airports
× RELATED 4 விமான நிலையங்களுக்கு மிரட்டல் சென்னை...