×

சென்னை பல்கலை துணைவேந்தரை தேர்வு செய்யும் தேடுதல் குழுவுக்கு தலைவராக ஜே.என்.யு துணை வேந்தரை நியமித்ததற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை: சென்னை பல்கலை துணைவேந்தரை தேர்வு செய்யும் தேடுதல் குழுவுக்கு தலைவராக ஜே.என்.யு துணை வேந்தரை நியமித்ததற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தை சேர்ந்த தலைசிறந்த கல்வியாளர் ஒருவரை தலைவராக நியமிக்க வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தேடுதல் குழு தலைவராக ஜெகதீஷ்குமாரை தமிழக ஆளுநர் நியமித்து இருப்பது மோசமான முன்னுதாரணம் என்று ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். ஜே.என்.யு பல்கலை மாணவர்கள் மீதான காட்டு மிராண்டித்தனமான தாக்குதலை கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்த்தவர் ஜெகதீஷ்குமார் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

Tags : MK Stalin ,vice-chancellor ,search committee ,JNU ,Chennai University Stalin , Stalin
× RELATED கோவையில் 5 சீட் பாஜ அடம் எஸ்.பி...