×

நாடாளுமன்ற துளிகள்

பிரதமரின் பயணங்கள் 446.52 கோடி செலவு:
பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்கு செலவிடப்பட்ட தொகை தொடர்பான கேள்விக்கு பதிலளித்த வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளீதரன், ‘‘கடந்த 5 ஆண்டுகளில் பிரதமரின் வெளிநாட்டு பயணங்களுக்காக 446.52 கோடி செலவிடப்பட்டுள்ளது. 2015-16ல் 121.85 கோடியும், 2016-17ல் 78.52 கோடியும், 2017-18ல் 99.90 கோடியும், 2018-19ல் 100.02 கோடியும் செலவிடப்பட்டுள்ளது. 2019-20ல் 46.23 கோடி செலவிடப்பட்டுள்ளது’’ என்றார்.

17 இந்தியருக்கு கொரோனா:
வெளிநாட்டில் எத்தனை இந்தியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு நேற்று பதிலளித்த வெளியுறவுத் துறை இணை அமைச்சர் முரளீதரன், ‘‘வெளிநாடுகளில் மொத்தம் 17 இந்தியர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் 16 பேர் ஜப்பான் சொகுசு கப்பலில் இருப்பவர்கள், ஒருவர் ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ளவர். கொரோனா பரவிய சீனாவிலிருந்து இதுவரை 723 இந்தியர்கள், 43 அண்டை நாட்டினர் உட்பட 766 பேரை இந்தியா மீட்டு அழைத்து வந்துள்ளது. இதே போல, ஜப்பான் சொகுசு கப்பலில் இருந்து வைரஸ் தொற்று இல்லாத 119 பேர் மீட்டு அழைத்து வரப்பட்டுள்ளனர்’’ என்றார்.

கிஷான் ரயில்  கமிட்டி அமைப்பு:
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் தனது பட்ஜெட் உரையில் பேசியபோது, ‘அழியக்கூடிய விளைபொருட்களை பொதுத்துறை மற்றும் தனியார் பங்களிப்புடன் குளிரூட்டப்பட்ட நிலையில் கொண்டு செல்ல கிஷான் ரயில் போக்குவரத்து அறிமுகம் செய்யப்படும்,’ என தெரிவித்தார்.   இது தொடர்பாக மக்களவையில் ேநற்று எழுப்பப்பட்ட கேள்விக்கு ரயில்வே அமைச்சர் பதிலில், ‘‘கிஷான் ரயிலை உருவாக்குவது குறித்து இறுதியான முடிவு எடுக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.விரைவில் அதுகுறித்து முடிவு எடுக்கப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Parliament ,trips , Prime Minister, trips cost
× RELATED டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய...