×

ஏர்செல் மேக்சிஸ் முன்ஜாமீன் விவகாரம்: அமலாக்கத்துறை மனுவுக்கு பதிலளிக்க சிதம்பரம், கார்த்திக்கு 3 வாரம் அவகாசம்

புதுடெல்லி: ஏர்செல்-மேக்சிஸ் அன்னிய முதலீடு ஒப்பந்தத்துக்கு, மத்திய நிதியமைச்சராக சிதம்பரம் இருந்தபோது ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்துக்கு சிதம்பரம் தனது அதிகாரத்தை மீறி ஒப்புதல் அளித்துள்ளார் என்றும், மேலும், இதில் 1.13 கோடி அளவுக்கு நிதி மோசடி நடந்ததாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது.      இந்த வழக்கில் சிதம்பரம் மற்றும் அவரது மகனுக்கு, அமலாக்கத்துறை எதிர்ப்பையும் மீறி விசாரணை நீதிமன்றம் கடந்தாண்டு செப்டம்பரில் முன்ஜாமீன் வழங்கியது.
இதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு செய்தது. இதன் மீதான விசாரணை நேற்று நடந்தது. அப்போது அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வக்கீல்கள், ‘‘முன்ஜாமீனை எதிர்த்து அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி சிதம்பரம், அவரது மகனுக்கு கடந்தாண்டு அக்டோபரில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால் அவர்கள் பதில் மனுத் தாக்கல் செய்யவில்லை’’ என்றனர். இதற்கு பதில் அளித்த சிதம்பரம் தரப்பு வக்கீல்கள், கூடுதல் கால அவகாசம் வேண்டும்’’ என்றனர். இதையடுத்து அமலாக்கத்துறை மனுவுக்கு, சிதம்பரம் மற்றும் கார்த்தி ஆகியோர் 3 வாரத்துக்குள் பதில் அளிக்க வேண்டும், எனவும் இந்த பதிலுக்கான மறுப்பை அமலாக்கத்துறை அடுத்த 2 வாரத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி அனு மல்கோத்ரா உத்தரவிட்டார்.


Tags : Karthi ,Chidambaram ,Aircel ,Maxis Munjam ,respondents ,Enforcement Department , Aircel Maxis, Enforcement Department, Chidambaram, Karthi
× RELATED மோடியை வீட்டுக்கு அனுப்ப கை...