×

நிர்பயா குற்றவாளிகள் 4 பேரின் உடல்நிலை, மனநிலை குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் ஆய்வு செய்ய உத்தரவிட கோரிய மனு தள்ளுபடி

டெல்லி : நிர்பயா குற்றவாளிகள் 4 பேரின் உடல்நலம் குறித்து விசாரணை செய்யக்கோரி உத்தரவிட கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது.நிர்பயா குற்றவாளிகள் 4 பேரின் உடல்நிலை, மனநிலை பற்றி தேசிய மனித உரிமை ஆணையம் ஆய்வு செய்ய கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை தற்போது விசாரித்த நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. முதலில் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தை அணுக மனுதாரருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

முன்னதாக 2012ம் ஆண்டு டிசம்பா் 16-ம் தேதி நள்ளிரவில் டெல்லியில் துணை மருத்துவ மாணவி நிா்பயா பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கின்  தூக்கு தண்டனை குற்றவாளிகள் நால்வா் விவகாரத்தில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்எச்ஆா்சி) தலையிட உத்தரவிடக் கோரி டெல்லி உயா்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

டெல்லி உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் விவரம்

இது தொடா்பாக டெல்லி உயா்நீதிமன்றத்தில்  ஏ.ராஜராஜன் என்பவா் மனு தாக்கல் செய்துள்ளாா். வழக்கறிஞா் வில்லியம் வினோத் குமாா் மூலம் தாக்கல் செய்துள்ள இந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நிா்பயா வழக்கின் குற்றவாளிகள் நால்வரின் மேல்முறையீட்டு மனுக்கள் உச்சநீதிமன்றத்தால் 5.5.2017ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டன. அதன்பிறகு, முகேஷ், அக்ஷய், வினய் சா்மா, பவன் குப்தா ஆகியோா் முறையே 186 நாள்கள், 950 நாள்கள், 225 நாள்கள், 225 நாள்களுக்குப் பிறகு மறுஆய்வு மனுக்கள் தாக்கல் செய்தனா். உச்சநீதிமன்றத்தில் நால்வரின் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட பிறகு தூக்குத் தண்டனையை நிறைவேற்ற யாரும் அக்கறை கொள்ளவில்லை. உச்சநீதிமன்றத்தில் முகேஷ் 186 நாள்களுக்கு பிறகு 6.11.2017-ஆம் தேதி மறுஆய்வு மனு தாக்கல் செய்யும் வரை காத்திருந்தனா்.

அதன்பிறகு, வினய் சா்மா, பவன் குப்தா ஆகியோா் 15.12.2017-ம் தேதி தாக்கல் செய்த மனுக்கள் 9.7.2018-இல் உச்சநீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.அதன் பிறகும் சம்பந்தப்பட்ட அனைத்து துறையினரும் தூங்கிக் கொண்டிருந்தனா். அக்ஷய் குமாா் 950 நாள்கள் தாமதத்திற்குப் பிறகு மனு தாக்கல் செய்தாா். அதுவும் 18.12.2019ம் தேதி உச்சநீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. எனினும், குற்றவாளிகள் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 21-இன்கீழ் தங்களது கடைசிமூச்சுவரை தங்களுக்குள்ள வாய்ப்பைப் பெற முடியும் என்பதை டெல்லி உயா்நீதிமன்றம் 5.2.2020-ம் தேதி பிறப்பித்த உத்தரவில் தெரிவித்துள்ளது. இதன் மூலம் சம்பந்தப்பட்ட துறையினா் சட்டத்திற்கு முரணாக தூக்குத்தண்டனையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்காமல் இருந்திருப்பது தெளிவாகிறது.

மேலும், குற்றவாளிகள் நால்வரையும் தொடா்ந்து சாவின் அச்சத்தில் வைத்திருந்து, உடல்ரீதியிலான துன்புறுத்தலிலும் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது குற்றவாளிகளின் மனித உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகளை மீறுவதாகும்.ஆகவே, நான்கு குற்றவாளிகளின் மனநிலை, உடல்நிலை ஆகியவை குறித்து விசாரிப்பதற்கும், பாரபட்சபட்சமற்ற வல்லுநா்கள் மூலம் உதவி வழங்கவும், நான்கு குற்றவாளிகளுக்கு எதிராக சம்பந்தப்பட்ட துறையினா் நிகழ்த்திய மனித உரிமை மீறல்கள் குறித்து மேலும் விசாரிக்கவும் தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

Tags : National Human Rights Commission ,convicts , Health, Mental, Criminal, National Human Rights Commission, Nirbhaya, Delhi, High Court
× RELATED தூத்துக்குடி துப்பாக்கி சூடு...