×

திருப்புவனம், தண்ராம்பட்டு ஊராட்சியில் ஒன்றிய குழு தலைவருக்கான மறைமுக தேர்தல் 3-வது முறையாக ஒத்திவைப்பு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஊராட்சியில் ஒன்றிய குழு தலைவர், மற்றும் துணை தலைவருக்கான மறைமுக தேர்தல் 3-வது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மாவட்ட ஊராட்சி தலைவர், ஒன்றிய தலைவர் மற்றும் துணைத்தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுக தேர்தல் ஜனவரி 11-ம் தேதி நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் நடைபெற்ற தேர்தலின் போது ஒன்றிய அலுவலகத்தில் சம்பந்தமில்லாதவர்கள் கூடியிருந்ததாக அதிமுகவினர் புகார் எழுப்பியதை அடுத்து தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

சட்டம் ஒழுங்ழு பிரச்னையை சுட்டிக்காட்டி ஜனவரி 30-ம் தேதி நடைபெற இருந்த தேர்தல் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று 3-வது முறையாக நடைபெற இருந்த மறைமுக தேர்தலை மாவட்ட ஆட்சியர் மீண்டும் ஒத்திவைத்துள்ளார். சுயேட்சை உறுப்பினர்கள் 2 பேர் உள்பட 6 ஒன்றிய குழு உறுப்பினர்கள் கேரளாவிற்கு கடத்தப்பட்டதாக கிடைத்த தகவலின் படி ஆட்சியர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.

திருவண்ணாமலையிலும் ஒத்திவைப்பு

திருவண்ணாமலை தண்ராம்பட்டு ஒன்றிய தலைவர் தேர்தல் 3-வது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வழக்கு நிலுவையில் உள்ளதால் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி ஒத்திவைத்துள்ளார். மேலும் அசம்பாவிதங்களை தவிர்க்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tags : election ,union leader ,Thiruppavanam Thiruppavanam ,Tanrampattu ,Panchayath Union Committee Chairman , Thiruppavanam, Tanrampattu, Indirect Election, Adjournment and Panchayath Union Committee Chairman
× RELATED மக்களவை தேர்தல் பரப்புரையில் ‘டீப்...