×

டெல்லி வன்முறைக்கு கண்டனம் தெரிவித்த ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர்: விளக்கம் கேட்டு ஈரான் தூதருக்கு இந்தியா சம்மன்!

புதுடெல்லி: டெல்லி வன்முறைக்கு ஈரான் அமைச்சர் கண்டனம் தெரிவித்தது தொடர்பாக ஈரான் தூதருக்கு இந்தியா சம்மன் அனுப்பியுள்ளது. டெல்லி கலவரம் நடந்து முடிந்து 4 நாட்கள் ஆகியும் அதன் பாதிப்பு இன்னும் தலைநகரில் போகவில்லை. டெல்லி கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது. படுகாயமடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஈரான் கண்டனம்

இந்நிலையில், டெல்லி கலவரம் குறித்து ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜவாத் ஷெரிப் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வரிசையாக கட்டவிழ்த்து விடப்படும் திட்டமிடப்பட்ட வன்முறைகளை ஈரான் கண்டிக்கிறது. பல நூறு வருடங்களாக இந்தியாவும், ஈரானும் நல்ல நண்பர்களாக இருக்கிறார்கள். இந்தியா அரசும் அதிகாரிகளும் இந்தியாவில் இருக்கும் எல்லோரும் நன்றாக இருக்க முயற்சிகளை எடுக்க வேண்டும். முக்கியமாக முட்டாள்தனமான அறிவற்ற குண்டர்களை வளர விட கூடாது, என மிகவும் கடுமையாக சாடியுள்ளார்.

மத்திய அரசு பதில்

இந்த நிலையில், வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். அதில், டெல்லியில் அமைதி நிலைநாட்டப்பட்டுள்ளது. அங்கு மக்கள் மத்தியில் அமைதியும், நம்பிக்கையும் திரும்பும் வகையில் அதிகாரிகள் செயல்பட்டு வருகிறார்கள். கூடுதலாக அங்கு எதுவும் அசம்பாவிதம் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உலக நாடுகள், அமைப்புகள் டெல்லி கலவரம் குறித்து பேசும் போது கவனமாக பேச வேண்டும்.

மிக முக்கியமான கட்டத்தில் பேசும் நீங்கள், தவறான பொறுப்பற்ற கருத்துக்களை கூற கூடாது. இது தவறானது, என்று ரவீஷ் குமார் குறிப்பிட்டுள்ளார். அதோடு இந்தியாவிற்கான ஈரான் தூதர் அலி செக்கெனிக்கு இந்திய வெளியுறவுத்துறை சார்பாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்தியாவுக்கு நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டுமே என்று அவருக்கு சம்மன் அனுப்பட்டுள்ளது.


Tags : Foreign Minister ,Iranian ,India ,ambassador ,Delhi , Delhi, Violence, Iran, Minister of Foreign Affairs, India, Islamists,
× RELATED சொல்லிட்டாங்க…