×

ஏமாற்றி சென்ற கணவன் எங்கிருந்தாலும் வாழ்க என்று தெரிவித்த இளம்பெண்; சகோதரியுடன் விஷம் குடித்ததாக வீடியோ வெளியீடு

சமூக வலைதளங்களில் வைரல் வீடியோ ஒன்றின் மூலம் பிரபலமான இளம்பெண் ஒருவர் தன்னுடைய சகோதரியுடன் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓரிரு நாட்களுக்கு இணையதள சேனல் ஒன்றில் இளம்பெண் ஒருவரை பேட்டி எடுத்தனர். அதில் தனது கணவர் தன்னை காதலித்து திருமணம் செய்து வேறொரு பெண்ணுடன் சென்று விட்டதாக அந்த இளம்பெண் கூறியிருந்தார். தனது கணவர் கட்டிய தாலியுடன் அவர் நினைவாகவே வாழ்வதாக தெரிவித்திருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

உண்மையான காதலுக்கு மரியாதை அளித்த பெண் என பலரும் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர். இந்நிலையில் பேட்டியளித்த இளம்பெண்ணும், அவரது சகோதரியும் மற்றொரு வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதில் ஏற்கனவே வெளியான வீடியோவால் தங்களது குடும்பத்திற்கு அவமானம் ஏற்பட்டுவிட்டதாக அவர்கள் தெரிவித்தனர். எனவே இருவரும் விஷம் குடித்துவிட்டதாக அந்த வீடியோவில் தெரிவித்துள்ளனர்.

இரண்டு இளம்பெண்கள் என்ன ஆனார்கள் என்பது குறித்த தகவல் கிடைக்கவில்லை. முந்தைய வீடியோவில் அந்த இளம்பெண் தெரிவித்த கருத்து பொய்யாக இருக்கலாம் என்றும், விளையாட்டாக பேசிய வீடியோவால் தனது குடும்பத்தினரின் வெறுப்புக்கு ஆளாகியிருக்கலாம் என்று தெரிகிறது. பேஸ்புக்கில் சிலர் மிகவும் ஆபாசமாக பின்னுட்டங்களை வெளியிட்டதால் விஷம் குடித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. சகோதரிகள் இருவரும் சேர்ந்து ஏராளமாக டிக்டாக் வீடியோ எடுத்து சமூக வலை தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : sister , Social website,Tik ToK, facebook, cheating husband, teenager viral video, suicide attempt
× RELATED ஐஸ்வர்யா ராஜேஷின் ‘சிஸ்டர்’